தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Vijay Do You Know The Release Date Of Actor Vijay's Talapati 68'

Actor Vijay : நடிகர் விஜயின் ‘தளபதி 68’ ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jan 28, 2024 10:54 AM IST

Actor Vijay : நடிகர் விஜயின் ‘தளபதி 68’ ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

Actor Vijay : நடிகர் விஜயின் ‘தளபதி 68’ ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
Actor Vijay : நடிகர் விஜயின் ‘தளபதி 68’ ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் விஜய் அவரது ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் (கோட்) தளபதி 68 என்று அழைக்கப்படும் திரைப்படம் எப்போது வெளியாகிறது என்பது குறித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்தப்பட்டத்தில் இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். இது சிலருக்கு எதிர்பார்ப்பையும், பலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரவசமூட்டும் படத்தின் தயாரிப்பாளர்களிடம் இருந்து என்ன வெளியாகியுள்ளது என்றால், இந்தப்படம் டைம் டிராவல் படமாகும். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இரண்டும் வெவ்வேறு லுக்காக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்பட்டது. இவரது ரசிகர்களை புத்தாண்டில் ஆச்சர்யப்படுத்துவதற்காக ஆண்டின் இறுதி நாளில் வெளியிடப்பட்டது. இதில் தான் இரட்டை வேடத்தில் நடிப்பதை அறிவித்த விஜய், படத்தின் பெயர் ’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் கோட்’ என்று தெரிவித்தார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் தனது இரட்டை வேடத்தை ஃபைட்டர் ஜெட் ஏரோப்ளைனின் பைலட் உடையில் வெளியிட்டிருந்தார். இதில் ஹேர் ஸ்டைல் மட்டும் மாறியிருந்தது. இதற்கு ’வெளிச்சம் இருளைப்போக்கும் ஆனால், இருள் வெளிச்சத்தை போக்காது’ என்ற வாசகத்துடன் இந்த போஸ்டர் இருந்தது.

இந்தப்படத்தை இயக்குபவர்கள், நடிகர் விஜயின் ரசிகர்களுக்கு, படத்தின் சூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் குறித்த அப்டேட்களை அவ்வப்போது வழங்கிகொண்டு இருக்கின்றனர். படத்தின் கதை, போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு நிறைய சேரம் தேவைப்படும் என்றும் கூறினர்.

ரிலீஸ் தேதி

நடிகர் விஜயின் கோட் படம் எப்போது வெளியாகும் என்ற பரபரப்பு இணையதளம் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா அமைக்கிறார். இந்தப்படம் இந்தாண்டு ஜூன் மாதத்தில் திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர். தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதில் நடித்துள்ளவர்கள்

இந்தப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி, சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஜய் ரசிகர்கள் இந்தப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் விஜய் அரசியல் கட்சி துவங்கவுள்ளார் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தப்படம் வெளியாவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான லியோ படம் ஹிட்டாகி விஜய் ரசிகர்களை மகிழ்வித்தது. அதோபோல் இந்தப்படமும் வெற்றி பெருமா என்பதை பொருந்திருந்துதான பார்க்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.