3 ஆம் முறையாக தள்ளிப்போகும் விஜய் தேவரகொண்டா படம்? அனிருத் தான் காரணமா? தீயாய் பரவும் வதந்திகள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  3 ஆம் முறையாக தள்ளிப்போகும் விஜய் தேவரகொண்டா படம்? அனிருத் தான் காரணமா? தீயாய் பரவும் வதந்திகள்..

3 ஆம் முறையாக தள்ளிப்போகும் விஜய் தேவரகொண்டா படம்? அனிருத் தான் காரணமா? தீயாய் பரவும் வதந்திகள்..

Malavica Natarajan HT Tamil
Published Jun 10, 2025 12:11 PM IST

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மேலும் தாமதமாகலாம் என்ற வதந்திகள் பரவி வருகின்றன.

3 ஆம் முறையாக தள்ளிப்போகும் விஜய் தேவரகொண்டா படம்? அனிருத் தான் காரணமா? தீயாய் பரவும் வதந்திகள்..
3 ஆம் முறையாக தள்ளிப்போகும் விஜய் தேவரகொண்டா படம்? அனிருத் தான் காரணமா? தீயாய் பரவும் வதந்திகள்..

இந்த ஸ்பை ஆக்ஷன் திரைப்படத்தை ஜூலை 4ஆம் தேதி வெளியிடுவோம் என்று கடந்த மாதம் படக்குழு புதிய தேதியை அறிவித்தது. ஆனால், அந்த தேதியில் கூட இந்த படம் வெளியாகாது என்று புதிய தகவல் பரவி வருகிறது. வேறொரு தேதி ஒன்றும் வெளியாகி உள்ளது. அந்த விவரங்கள் இதோ...

தள்ளிப் போகிறதா ரிலீஸ்?

கிங்டம் திரைப்படம் ஜூலை 4ஆம் தேதியிலிருந்து ஒத்திவைக்கப்படுவது உறுதியாகிவிட்டது என்று திரையுலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. வேறொரு ஹீரோவின் திரைப்படம் அந்த தேதியை உறுதி செய்துள்ளதால் அந்த வதந்திக்கு மேலும் வலு சேர்ந்துள்ளது. கிங்டம் திரைப்படத்தின் வெளியீட்டை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டியுள்ளது.

அனிருத் காரணமா?

இந்த முறை கிங்டம் திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தான் காரணம் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த திரைப்படத்திற்கான இசை பணிகள் இன்னும் நிறைய நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. ரீரிக்கார்டிங் இன்னும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இதனாலேயே கிங்டம் திரைப்படத்தை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்க படக்குழு யோசித்து வருவதாக தெரிகிறது. மேலும், சில காட்சிகளை மீண்டும் படமாக்க வாய்ப்பு இருப்பதாகவும் வதந்திகள் உள்ளன.

தள்ளிப் போய் கொண்டே இருக்கும் ரிலீஸ்

மொத்தமாக கிங்டம் ஜூலை 4ஆம் தேதியிலிருந்து ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. படக்குழு எப்போது விளக்கம் அளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கிங்டம் திரைப்படத்தை முதலில் இந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். அதன் பிறகு மே 30 ஆம் தேதிக்கு தேதி மாற்றப்பட்டது. மீண்டும் ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது மேலும் தாமதமாகி ஜூலை 25 ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்திவைக்கப்படும் என்று வதந்திகள் வருகின்றன. இப்படி இந்த படம் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது.

ரூ. 100 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்

கிங்டம் திரைப்படத்தை கௌதம் தின்னனூரி இயக்குகிறார். பவர்ஃபுல் ஸ்பை ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். ஏற்கனவே வந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் வெளியீடு மட்டும் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது.

கிங்டம் திரைப்படம் ரூ.100 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் கிரியேஷன்ஸ் பேனர்களில் நாகவம்சி, சாய் சௌஜன்யா தயாரிக்கிறார்கள். தெலுங்குடன் சேர்த்து ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளத்திலும் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோ சத்யதேவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.