காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தம்.. பாகிஸ்தான் மக்களே பாகிஸ்தானை தாக்குவார்கள்.. விஜய் தேவரகொண்டா அதிரடி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தம்.. பாகிஸ்தான் மக்களே பாகிஸ்தானை தாக்குவார்கள்.. விஜய் தேவரகொண்டா அதிரடி..

காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தம்.. பாகிஸ்தான் மக்களே பாகிஸ்தானை தாக்குவார்கள்.. விஜய் தேவரகொண்டா அதிரடி..

Malavica Natarajan HT Tamil
Published Apr 27, 2025 01:42 PM IST

ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பரபரப்பான கருத்தை தெரிவித்தது இப்போது பேசுபொருளாகி உள்ளது.

காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தம்.. பாகிஸ்தான் மக்களே பாகிஸ்தானை தாக்குவார்கள்.. விஜய் தேவரகொண்டா அதிரடி..
காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தம்.. பாகிஸ்தான் மக்களே பாகிஸ்தானை தாக்குவார்கள்.. விஜய் தேவரகொண்டா அதிரடி..

பஹல்காம் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம், காஷ்மீர் தங்களுக்கே சொந்தம் என்று கூறி இந்தியாவை ஆத்திரமூட்டி வருகிறது பாகிஸ்தான். இந்நிலையில், காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்று விஜய் தேவரகொண்டா கருத்து தெரிவித்துள்ளார்.

முறையான கல்வி வேண்டும்

"உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன, வலியை நெருக்கமாக பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், அவர்களின் வலியையும் கோபத்தையும் நாங்கள் உணர்கிறோம். அது நடந்திருக்கக் கூடாது. இந்த சம்பவங்கள் காஷ்மீரில் தொடர்ந்து நடக்கின்றன. அவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட வேண்டும், மூளைச்சலவை செய்யப்படக்கூடாது" என்று விஜய் கூறினார்.

காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம்

"காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன், காஷ்மீரிகள் மனிதர்கள். நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் குஷி படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தேன். அப்போது அவர்களுடன் எனக்கு அழகிய நினைவுகள் உள்ளன.

பாகிஸ்தானியர்கள் என்ன செய்வார்கள்?

நாட்டின் குடிமக்கள் வளங்கள் இல்லாததால் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர் என்று கூறினார், "முறையான மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாத தங்கள் சொந்தங்களை கூட பாகிஸ்தான் கவனிக்க முடியாது. தங்கள் மக்களை கவனித்துக் கொள்ள முடியாததால் பாகிஸ்தானியர்கள் இங்கு என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்?

பாகிஸ்தானியர்களே பாகிஸ்தானை தாக்குவார்கள்

பாகிஸ்தானை இந்தியா தாக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்ந்தால், பாகிஸ்தானியர்களே வெறுப்படைந்து தங்கள் அரசாங்கத்தைத் தாக்குவார்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் செய்ததைப் போலத்தான் இவர்களும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கு எந்த அறிவும் குறைந்தபட்ச பொது அறிவும் இல்லாமல் அவர்கள் செய்யும் விஷயங்கள் இவை. மக்களாக, நாம் ஒன்றாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் நேசிக்க வேண்டும்" என்று விஜய் கூறினார்.

பாராட்டும் விமர்சனமும்

கல்வி தான் மிகச் சிறந்த சாவி. எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம், நம் பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்போம். அப்போதுதான் நம்மால் முன்னேற முடியும்" என்றார். இதையடுத்து இணையத்தில் சிலர் விஜய் தேவரகொண்டாவின் பேச்சை ஆமோதித்தனர். பொது நிகழ்ச்சியில் பகிரங்கமாக பேசியதற்காக அவரது 'தைரியத்தை' பாராட்டினர். இருந்தபோதிலும், சிலர் ஒரு திரைப்பட நிகழ்வில் அரசியல் பேசியதற்காக அவரை ட்ரோல் செய்தனர்.

சிர்ஞ்சீவியால் ஈர்க்கப்பட்டு..

மேலும் இந்த நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியால் ஈர்க்கப்பட்டு அகரம் அறக்கட்டளையைத் தொடங்கி மாணவர்களுக்கு உதவி வருவதாக சூர்யா தெரிவித்தார். நானியின் 'ஹிட் 3' படமும் மே 1ம் தேதி வெளியாகிறது. அதுவும் வெற்றியடையும் என்று சூர்யா நம்புகிறார்.

சூர்யாவின் புதிய படமான 'ரெட்ரோ' மே 1 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.