Tamil News  /  Entertainment  /  Actor Vadivelu Talks About Politics
வடிவேலு
வடிவேலு

Vadivelu: அரசியல் நமக்கு எதற்கு - நடிகர் வடிவேலு கேள்வி

23 September 2022, 11:18 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 11:18 IST

போண்டா மணிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என வடிவேலு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு நேற்று ( செப் 22) சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு அங்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

முருகனை வழிபட்ட அவர், கோயில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நான் நடிக்கின்ற மற்றும் வர இருக்கும் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கும் தெரியும்.

நான் தற்போது நாய் சேகர் ரிட்டன், மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இயக்குநர் மாரி செல்வராஜ் திரைப்படத்தில் தான் குணசித்திர நடிகனாக நடித்து இருக்கிறேன். உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த மாமன்னன் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது.

என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்கள் இல்லாத காரணத்தினால் தற்போது முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. தற்போது போண்டா மணி நடித்த திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

போண்டா மணிக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன். அரசியல் நமக்கு வேண்டாம். சினிமாவில் இருந்து கொண்டே நல்லது செய்யலாம்” என்றார். அவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்