Vadivelu : ‘விஜய் அரசியல்.. அஜித் விபத்து..’ மதுரையில் வடிவேலு சொன்ன ஒரே பதில்..!
Vadivelu : ‘இப்போதெல்லாம் தேர்வுசெய்து படங்களை நடிக்கிறேன். மாமன்னன் ஒரு மாதிரியான கதாபாத்திரம் , கேங்கர்ஸ் முழு நீள நகைச்சுவை படம். ரொம்ப சிறப்பாக இருக்கும். கேங்கர்ஸ் குழந்தை குட்டிகளோடு சேர்ந்து எல்லாரும் ரசிக்கும் அளவிற்கு பிரமாதமாக வந்துள்ளது’

Vadivelu : ‘ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்க என்று சொன்னேன், அது ஒன்னும் ஜாலியான மேட்டர் தானே, வடிவேல் சொன்னதுனால எதுவும் தப்பில்லை , ஏழை பாழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கன்னு சொன்னேன்,’ என்று வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல்விழாவில் நடிகர் வடிவேலு பேட்டியளித்தார்.
மதுரை பி.பி.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘வருமானவரித்துறை சார்பில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு நாளுக்கு முன்பு எனக்குப் பொங்கல் வந்தது போல உள்ளது. மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற ஆசைப்பட்டேன் அது நடந்துவிட்டது. அதனை இங்கே சிறப்பாக கொண்டாடி விட்டேன்,’’ என்று கூறினார். அதன் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள்
