நான் ஏகலைவன்.. அவர் துரோணாச்சாரியார்.. ரஜினியை புகழ்ந்து கூலி படத்தின் முக்கிய அப்டேட்டை தந்த நடிகர் உபேந்திரா..
நடிகர் ரஜினி காந்த்தின் கூலி படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கானும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்பதை தற்போது நடிகர் உபேந்திரா உறுதி படுத்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த ஆக்ஷன் த்ரில்லர் படமான கூலி மூலம் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். இந்திய சினிமாவின் சில பெரிய நடிகர்களை ஒன்றிணைப்பதால் இந்தப் படம் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கானும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
உபேந்திராவின் பட விளம்பர நிகழ்ச்சி
கன்னட நடிகர் உபேந்திர ராவ், ஹைதராபாத்தில் சிவகுமார் மற்றும் ராஜ் பி ஷெட்டியுடன் தனது அடுத்த, 45வது படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்துள்ளதும் சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோக்களை வைத்து தெரிகிறது.
அவர் என் துரோணாச்சாரியார்
கூலி படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து உபேந்திராவிடம் கேட்கப்பட்டது, அவர், "லோகேஷ் கனகராஜ் கதை சொன்னபோதுதான் நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. நான் ரஜினி காந்த் சாருக்கு அருகில் சில நிமிடங்கள் நின்றாலே போதும் என்றுதான் சொன்னேன். ஏனென்றால் நான் ஏகலைவன் என்றால், ரஜினி சார் என் துரோணாச்சாரியார். அவர் அனைவருக்கும் என்டெர்டெயிண்மெண்ட் அளித்திருக்காலம். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் எனக்கு ஞானோதயம் அளித்துள்ளார். ரஜினி சார் அப்படிப்பட்டவர் தான். அவருடன் பணியாற்றுவதில் நான் பாக்கியசாலியாக உணர்கிறேன்" என்றார்.
வதந்திகளை உறுதி செய்த உபேந்திரா
அப்போது, அவரிடம் நாகார்ஜுனா மற்றும் அமீருடன் சேர்ந்து கூலி படத்தில் நடித்தீர்களா எனக் கேட்டபோது, "ஆமாம், எங்கள் அனைவருக்கும் படத்தில் கூட்டுக் காட்சிகள் உள்ளன" என்றார். முன்னதாக கூலி படத்தில் ஆமிர் கான் நடிக்கிறார் என்றும் அவருடைய காட்சிகள் எல்லாம் சென்னை, மும்பை என பல இடங்களில் படமாக்கப்பட்டது என்றும் கூறினர். ஆனால் படக்குழுவினரிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் கிடைக்காததால் இந்த செய்தி இத்தனை நாள் வதந்தியாகவே இருந்தது.
கூலி படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இது ரஜினியின் 171 ஆவது படமாகும். ரஜனிகாந்த் இந்தப் படத்தில் தங்கக் கடத்தல் மஃபியா கும்பலைச் சேர்ந்தவராக நடிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஆமிர் கான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், அதே நேரத்தில் பஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். பூஜா ஹெக்டேவும் படத்தில் ஒரு சிறப்பு நடனப் பாடலில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
படத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் ஆமிர் கானின் சிறப்புத் தோற்றம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவரது கதாபாத்திரம் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
