Vishal Thimiru: மது பார்ட்டியில் ஆடிக்கொண்டிருந்த விநாயகன்.. கபக்கென்று பிடித்த டைரக்டர்! - திமிரில் கமிட் ஆன கதை!
ஆனால் நான்தான் அந்த ஈஸ்வரி கேரக்டரில் ஸ்ரேயாதான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். மேலும் ஸ்ரேயா இல்லை என்றால் எனக்கு படம் வேண்டாம் என்று கூறினேன். இதையடுத்து ஸ்ரேயாவிடம் சென்று கதை சொல்லுங்கள் என்று கூறினர்.

நடிகர் விஷால், ரீமா சென், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் திமிரு. இந்தப்படத்தை இயக்கியவர் தருண் கோபி. இவர் அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் திமிரு படம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார்.
அவர் பேசும் போது, “ திமிரு படத்தில் நான் விஷாலுடன் கமிட் ஆன போது, அந்தப்படம் முழுக்க முழுக்க ஈஸ்வரி கேரக்டரின் மீது பயணிக்கிறது என்பதை புரிந்து கொண்ட விஷால் தரப்பு, அந்தக் கேரக்டருக்கு பாலிவுட் பிரபல நடிகைகளை பரிந்துரை செய்தார்கள்.