யாரும் எதிர்பார்க்காத வேலையை செய்த கங்குவா! வாஷ் அவுட் படத்திற்கு கிடைக்குமா ஆஸ்கார்? மீண்டும் ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்..
ரசிகர்களால் பல ட்ரோல்களுக்கு உள்ளான கங்குவா திரைப்படம் 2024ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு விண்ணப்பத்துள்ளது.

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மோசமான விமர்சனம்
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளிவந்த கங்குவா, மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அத்துடன் அந்தப் படத்தில் நடித்தவர்களையும் தனிப்பட்ட முறையில் மிக மோசமாக பேசி, மிரட்டல் விடுத்தனர்.இதனால், படம் 2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்த படக்குழுவுக்கு ஏமாற்றமேமிஞ்சியது.