Retro Release: தி ஒன் ஃப்ரம் மே ஒன்.. நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கொண்டாட தயாரான ரசிகர்கள்
Retro Release: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Retro Release: கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளதாக அந்த போஸ்டர் மூலம் தெரிகிறது. இது ஒரு பீரியட் ஆக்ஷன் படம். இந்த படத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் தோற்றம் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ரெட்ரோ ரிலீஸ் தேதி
சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. குறிப்பாக பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியை சந்தித்த கங்குவா படத்திற்குப் பிறகு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. 2 ஆண்டுகளாக காத்திருந்து சூர்யாவை பெரிய திரையில் பார்க்க துடித்த ரசிகர்களுக்கு கங்குவா ஏமாற்றத்தை கொடுத்ததால் மெட்ரோ மீது எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.
இந்நிலையில், ரெட்ரோ படம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் புதிய போஸ்டரும் பகிரப்பட்டுள்ளது, போஸ்டரின் படி ரெட்ரோ படம், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது தெரிகிறது.
தெறிக்கவிடும் டைட்டில் டீஸர்
இதையடுத்து சூர்யா 44 என்ற அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் டீஸர் 2.16 நிமிடங்கள் ஓடுகிறது. படத்துக்கு ரெட்ரோ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சூர்யா-பூஜா ஹெக்டே இடையிலான ரெமான்ஸ் காட்சியுடன் அமைந்திருக்கும் டீஸர், இடையே சூர்யாவில் அதிரடி அவதாரத்தை வெளிப்படுத்தும் விதமாக காட்சிகளும் தோன்றும் விதமாக டீஸர் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
ரெட்ரோ திரைப்படம்
கார்த்திக் சுப்பராஜ் சொந்த நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் ஷங்கர் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள். ஷ்ரேயா சரண் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். படத்துக்கு இசை - சந்தோஷ் நாரயணன். இந்த படத்தின் ஸ்டிரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
2 வருட டிஸ்கஷன்
இப்படம் குறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசும் போது, "இந்தக் கூட்டணி குறித்தான ரகசியத்தை பாதுகாப்பது என்பது மிக மிக முக்கியமானது. திரைத்துறையில் தற்போது அதிகமான அளவில் தகவல் கசிவு நடந்து வருகிறது. அதனால் சரியான தருணம் வரும் வரை இந்த கூட்டணி தொடர்பான ரகசியத்தை நாங்கள் பாதுகாத்து வந்தோம்.
இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்துள்ளது. இந்தக் கூட்டணி அவர்களின் கலை குறித்தான பார்வையை உயிர்பிப்பதற்காக சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது" என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்