ரிலீஸ்.. டைட்டில் என சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த சூர்யா 45.. வதந்திகளுக்கு விடை தருமா படக்குழு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரிலீஸ்.. டைட்டில் என சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த சூர்யா 45.. வதந்திகளுக்கு விடை தருமா படக்குழு?

ரிலீஸ்.. டைட்டில் என சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த சூர்யா 45.. வதந்திகளுக்கு விடை தருமா படக்குழு?

Malavica Natarajan HT Tamil
Published May 08, 2025 02:18 PM IST

நடிகர் சூர்யா- ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகிவரும் சூர்யா 45 படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த ஏராளமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

ரிலீஸ்.. டைட்டில் என சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த சூர்யா 45.. வதந்திகளுக்கு விடை தருமா படக்குழு?
ரிலீஸ்.. டைட்டில் என சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த சூர்யா 45.. வதந்திகளுக்கு விடை தருமா படக்குழு?

சூர்யா 45 பெயர்?

இந்த நிலையில், ரெட்ரோ படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, சூர்யா ரசிகர்கள் அவரது அடுத்த படத்தின் வெளியீடு பற்றி பேசத் தொடங்கிவிட்டனர். ரெட்ரோ படத்திற்கு பின் நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஆர். ஜே. பாலாஜியே இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அத்துடன் அந்தப் படத்தின் பெயர் 'பேட்டைக்காரன் ' என இருக்கலாம் எனவும் தெரிகிறது.

இந்நிலையில், சூர்யா 45 படத்தின் பெயர் குறித்தும், படத்தின் வெளியீடு குறித்தும் கடந்த சில தினங்களாக மக்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். அவர்கள் கூறும் தகவல் படி, சூர்யா 45 படத்தின் டைட்டிலை படக்குழு ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாள் ட்ரீட்டாக ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

அத்தோடு இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. இதுதொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கும் வரை இந்த செய்திகளில் எந்தவித நம்பகத் தன்மையும் இல்லை. ஆனால், இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டமாகவே எடுத்து வருகின்றனர்.

சூர்யா 45 படக்குழு

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தில், ஸ்வாசிகா, காளி வெங்கட், நட்டி, யோகிபாபு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவை, சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

வக்கீலாக சூர்யா?

அத்துடன் இந்தப் படத்தில் சூர்யா சூரரைப் போற்று படத்திற்கு பின் வக்கீலாக நடிக்க உள்ளதாகவும், சூர்யாவிற்கும் த்ரிஷாவிற்கும் மாஸ் இசையில், நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுக்கு மத்தியில் ஒரு பாடல் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

ரெட்ரோ படம்

முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். காதல், அதிரடி, த்ரில்லர் கலந்த இந்தப் படத்தை சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ரெட்ரோவுக்குப் பிறகு தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கு முன் தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.