Actor Surya: கேடு கெட்ட காட்சி..உங்க தம்பிய பாருங்க சூர்யா.. உங்க அப்பா சொல்லிக்கொடுக்கலையா..’ -ராஜேஸ்வரி பிரியா தாக்கு!
Actor Surya: உங்கள் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? உங்கள் நடிப்பை நம்பாமல் எப்போது சிகரெட்டை நம்பினீர்களோ அப்போதே நடிகராக தோற்று போய்விட்டீர்கள் சூர்யா - ராஜேஸ்வரி பிரியா தாக்கு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இன்று தன்னுடைய 49 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 44 படத்தில் இருந்து டீசர் வீடியோ வெளியாகி இருக்கிறது.
இந்த வீடியோவில், நடிகர் சூர்யா புகைப்பிடித்துக்கொண்டு வருவது போன்ற காட்சி அமைப்பு இருந்தது. இந்த நிலையில் இதனை கண்டித்து, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவி ராஜேஸ்வரி பிரியா கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
கேடு கெட்ட காட்சியாக உள்ளது.
அந்த பதிவில், “ சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் சூர்யா அவர்கள், தனது சொந்த தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், பெயரே வைக்காத புதிய படத்தின் டீசர் காட்சியில் சிகரெட் புகைத்தபடி வருவது கேடு கெட்ட காட்சியாக உள்ளது.