Actor Surya: அடுத்த அதிரடியில் இறங்கிய சூர்யா.. உற்சாகமாக தொடங்கிய கவுண்டன்.. மே வரை நிற்காமல் நடக்கும் சம்பவம்..
Actor Surya: நடிகர் சூர்யாவின் வரவிருக்கும் படமான ரெட்ரோ, படத்தின் பிடிஎஸ் காட்சிகளை காமிக் வடிவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

Actor Surya: சூர்யாவின் 44-வது படமாக உருவாகி வருகிறது ரெட்ரோ. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவான படம் கங்குவா. இந்தப் படத்தைக் காண சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆவலய் காத்திருந்த சமயத்தில் அந்தப் படம் பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதையடுத்து கங்குவா படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்தப் படத்திற்குப் பிறகு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரெட்ரோ படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் சூர்யாவின் தோற்றமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பீரியட் ஆக்ஷன் பேண்டஸி காதல் திரைப்படமாக ரெட்ரோ உருவாகி உள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறி உள்ளார்,
காமிக்கில் வரும் சூர்யா
இந்தத் தகவல் எல்லாம் மக்களுக்கு தெரியவந்த நிலையில், ரெட்ரோ படக்குழு புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளது. அதுதான், ரெட்ரோ படத்தின் பிடிஎஸ் காட்சிகளை காமிக் தோற்றத்தில் வெளியிடுவது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், "காமிக் ஸ்ட்ரிப் ஸ்டைலில் இப்போதே... நாங்கள் உங்களை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திரைக்குப் பின்னால் அழைத்துச்செல்கிறோம். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மே 1 ஆம் தேதி ரெட்ரோ படம் திரைக்கு வருகிறது. ஆனால் ரசிகர்கள் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்? நாங்கள் ஒவ்வொரு வாரமும் வேடிக்கையான BTS (பிஹைண்ட் தி சீன்ஸ்) கதைகளை ஒரு காமிக் ஸ்ட்ரிப்பாகக் கொண்டு வருவோம்!
தொடங்கிய கவுண்டவுன்
ஆன்-செட் மேட்னஸ் முதல் இதுவரை காணப்படாத தருணங்கள் வரை எங்களால் முடிந்த வரை மக்களுக்கு பிடித்த வகையில் வெளிப்படுத்தத் தயாராக உள்ளோம். அதனை காண நீங்கள் எங்களுடன் இணைந்திருங்கள்... மே 1 ஆம் தேதிக்கான கவுண்டவுன் தற்போது இன்னும் உற்சாகமாகிவிட்டது!" எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பை எதிர்பார்க்காத ரசிகர்கள் சூர்யாவை காமிக் தோற்றத்தில் பார்க்க ஆவலாக உள்ளனர்.
பரவும் வதந்தி
அதே சமயம், படம் மே மாதம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் படத்தின் டிரெயிலர், பாடல் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த சமயத்தில் சிலர் காதலர் தினத்தை முன்னிட்டு ரெட்ரோ படத்தின் பாடல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மெட்ரோ ரிலீஸ்
ரெட்ரோ படத்திந் கதையில் ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் படம் காதலை மையப்படுத்தியது எனக் கூறி ரசிகர்களுக்கு கூடுதல் ஷாக் கொடுத்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இதை எல்லாம் கேட்ட ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் குறித்து ஆர்வமாக இருந்த சமயத்தில் படக்குழு ரெட்ரோ படம் கோடை விடுமுறை தினத்தை முன்னிட்டு மே மாதம் 1ம் தேதி வெளியாகும் என அறிவித்தது.
ரெட்ரோ டீம்
கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் ஷங்கர் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள். ஷ்ரேயா சரண் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். படத்துக்கு இசை - சந்தோஷ் நாரயணன். இந்த படத்தின் ஸ்டிரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம்வாங்கியுள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்