தொடர் தோல்விகளுக்கு பின் தியேட்டருக்கு படையெடுக்கும் சூர்யா ரசிகர்கள்.. எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ரெட்ரோ?
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், சூர்யாவின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா திரைப்படமும், அதற்கு முன் வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தும் அந்தத் திரைப்படங்கள் கடுமையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இதில் மொத்தமாக சூர்யாவுடன் சேர்ந்து ரசிகர்களும் நொந்து போயினர்.
பெரும் எதிர்பார்ப்பு
அதனால், இன்று மே 1ஆம் தேதி சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்தை ரசிகர்கள் மட்டுமல்ல, சூர்யாவும் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் பாடல்களும், டீசரும் எகிடுதகிடு ஹிட்டடித்து உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் இந்தப் படத்திற்கான புரொமோஷன் முழு வேகத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் நாளான இன்று சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் தியேட்டருக்கு சென்று வருகின்றனர்.