தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Suriya Who Plays Karna In Bollywood

Actor Suriya: சிவப்புக் கம்பளம் விரித்த பாலிவுட் - கர்ணனாக மாறும் சூர்யா!

Marimuthu M HT Tamil
Feb 03, 2024 07:31 PM IST

நடிகர் சூர்யா, கர்ணா என்னும் பான் இந்தியப் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

கர்ணனாக நடிக்கும் சூர்யா -
கர்ணனாக நடிக்கும் சூர்யா -

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்பின், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, கல்லூரி மாணவராக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்திற்கு புறநானூறு எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் உடல்பயிற்சி செய்து எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், நடிகர் சூர்யா. இப்படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். படத்தின் படப்பிடிப்பும் வெகுவிரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

விடுதலை 2 படத்தின் ரிலீஸுக்குப் பின், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இதற்காக காளையுடன் சேர்ந்து டெஸ்ட் சூட் செய்த, நடிகர் சூர்யாவின் வீடியோக்கள் வெளியாகின.

இந்நிலையில் நடிகர் சூர்யா, இந்தியில் ரங் தே பசந்தி, டெல்லி 6, தூஃபான் ஆகியப் படங்களை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட ''கர்ணா'' என்னும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படமானது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. மேலும் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் தெரிகிறது. இப்படத்தினுடைய படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் மும்பையில் தொடங்கவுள்ளதாக, படத்தின் கதையாசிரியர் ஆனந்த் நீலகண்டன் கூறியுள்ளார். மேலும், அந்த சூட்டிங் தொடர்ந்து நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி எனக்கூறப்படுகிறது. 

இந்நிலையில் இப்படத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் மூலம் நடிகர் சூர்யா நேரடி இந்தி படத்தில் வெகுநாட்களுக்குப் பின் நடிக்கிறார். முன்னதாக ராம் கோபால் வர்மாவின், ரத்த சரித்திரா என்னும் இந்தி படத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்துக்குப் பின் நடிகர் சூர்யா இந்தி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி, பான் இந்தியா ஸ்டாராக உருவெடுக்கவுள்ளதாகவும், அதனை திட்டமிட்டே மும்பையில் வீடு வாங்கி குடியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால்,வெகுசிலரோ நடிகை ஜோதிகாவுக்கும் மாமனார் சிவகுமாருக்கும் ஏற்பட்ட சண்டையினால்தான், ஜோதிகா சூர்யாவை அழைத்துக்கொண்டு மும்பையில் குடியேறிவிட்டதாகவும் கூறி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.