ஓடிடியை கலக்க வரும் சூர்யாவின் ரெட்ரோ படம்! எப்போது ? எந்த ஓடிடியில் ரிலீஸ்? இண்டர்நெட்டில் வைரலாகும் தகவல்
நடிகர் சூர்யாவின் பிளாக்பஸ்டப் ரெட்ரோ படம் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

ஓடிடியை கலக்க வரும் சூர்யாவின் ரெட்ரோ படம்! எப்போது ? எந்த ஓடிடியில் ரிலீஸ்? இண்டர்நெட்டில் வைரலாகும் தகவல்
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா திரைப்படமும், அதற்கு முன் வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தும் அந்தத் திரைப்படங்கள் கடுமையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இதில் மொத்தமாக சூர்யாவுடன் சேர்ந்து ரசிகர்களும் நொந்து போயிருந்தனர்.
ரெட்ரோ படம்
இந்த நிலையில் தான் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்து ரெட்ரோ படத்தில் நடித்தார். இந்தப் படம் சூர்யா ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை தந்தது. அதிரடி ஆக்ஷன் காதல் ட்ராமா திரைப்படம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தததால் வெளியான சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியது.