அகரம் பவுண்டேஷனுக்கு பெரும்பாலான டொனேஷன் எங்கிருந்து வருது தெரியுமா? சூர்யா உடைத்த ரகசியம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அகரம் பவுண்டேஷனுக்கு பெரும்பாலான டொனேஷன் எங்கிருந்து வருது தெரியுமா? சூர்யா உடைத்த ரகசியம்..

அகரம் பவுண்டேஷனுக்கு பெரும்பாலான டொனேஷன் எங்கிருந்து வருது தெரியுமா? சூர்யா உடைத்த ரகசியம்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 27, 2025 03:33 PM IST

தனது அகரம் பவுண்டேஷனுக்கான பெரும்பாலான நிதி, நன்கொடைகள் எங்கிருந்து வருகிறது என்பதை சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

அகரம் பவுண்டேஷனுக்கு பெரும்பாலான டொனேஷன் எங்கிருந்து வருது தெரியுமா? சூர்யா உடைத்த ரகசியம்..
அகரம் பவுண்டேஷனுக்கு பெரும்பாலான டொனேஷன் எங்கிருந்து வருது தெரியுமா? சூர்யா உடைத்த ரகசியம்..

சிரஞ்சீவி தான் இன்ஸ்பிரேஷன்..

ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் இரத்த வங்கிக்கு சென்ற பின் தான் எனக்கு ஒரு அறக்கட்டளையைத் தொடங்குவதற்கான விதை மனதிற்குள் முளைத்ததாக சூர்யா நிகழ்ச்சியில் தெரிவித்தார். "இது எல்லாம் இங்குதான் தொடங்கியது, சிரஞ்சீவிகாருவுடனான எனது அனுபவம் இங்கே தொடங்கியது... ரத்த வங்கிக்கு சென்ற எனக்கு சிரஞ்சீவி காருவின் ரத்த வங்கியில் இருந்துதான் இந்த ஐடியா வந்தது. நிச்சயமாக, உங்களால் தான் என்றார்.

தைரியம் தந்த ரசிகர்கள்

இந்த பயணத்தில் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், "அகரம் அறக்கட்டளையைத் தொடங்குவதற்கான சக்தியையும், தைரியத்தையும் நீங்கள் எனக்கு வழங்கினீர்கள். உங்களால்தான் எங்களிடம் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள் உள்ளனர்" என்றார்.

தெலுங்கு மக்களிடம் பெரும்பாலான நன்கொடை

தனது அறக்கட்டளைக்கான நன்கொடைகளில் பெரும் பகுதி தெலுங்கு பேசும் மக்களிடமிருந்து வருகிறது என்பதையும் சூர்யா வெளிப்படுத்தினார். "ஐந்து-ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அகரம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக நான் அமெரிக்கா சென்றிருந்தேன். 30 சதவீதத்துக்கும் அதிகமான நிதி அங்குள்ள தமிழ் மாணவர்களுக்கு தெலுங்கு பேசும் சமூகத்திடமிருந்து வந்தது.

இப்போதும் தெலுங்கு மொழி பேசும் மக்களே, மிகவும் கனிவான இதயம் கொண்ட எனது அற்புதமான மக்கள். இப்போதும், இன்றும், இன்றுவரை தமிழ் மாணவர்களின் கல்வியை ஆதரிக்கின்றனர். எனவே எனக்கு நிறைய நன்றியுணர்வு உள்ளது, நான் வாழ்க்கைக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், "என்று அவர் கூறினார். இதன் மூலம் சூர்யா அகரம் அறக்கட்டளைக்கு வரும் நன்கொடை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஹிட் 3 படத்திற்கு வாழ்த்து

இந்த நிகழ்வில், சைலேஷ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட்: தி தேர்ட் கேஸ் படமும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது. "என் அருமை நண்பர் நானி ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். அவரது வெற்றிப் பயணம் தொடரட்டும். சரிபோதா சனிவாரம், கோர்ட் (அவர் தயாரித்த படம்) படத்துக்குப் பிறகு ஹாட்ரிக் அடிக்கட்டும்.

நான் கோர்ட் படத்தை மிகவும் நேசித்தேன். அது ஒரு அழகான படம். ஒரு அழகான படத்தை வழங்கிய முழு குழுவிற்கும் ஹேட்ஸ் ஆஃப். ஹிட் 3 நானிக்கு ஒரு அழகான வெற்றிக் கதையாக இருக்கட்டும், அவர் சொன்னது போல், அது மே 1 அன்று ஒரு விருந்தாக இருக்கட்டும். அத்துடன் ரெட்ரோ படத்தையும் அனைவரும் கொண்டாடலாம்" என்றார்.