ரெட்ரோ பட வெற்றி.. அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நன்கொடை வழங்கிய படக்குழு! வாழ்த்து மழையில் சூர்யா..
ரெட்ரோ திரைப்படத்தின் வசூலில் இருந்து ரூ.10 கோடியை ஏழை மாணவர்களின் கல்விக்காக சூர்யா நன்கொடையாக வழங்கியுள்ளார். இது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

ரெட்ரோ பட வெற்றி.. அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நன்கொடை வழங்கிய படக்குழு! வாழ்த்து மழையில் சூர்யா..
ரெட்ரோ படத்தின் வசூலில் இருந்து ரூ.10 கோடியை ஏழை மாணவர்களின் கல்விக்காக நடிகர் சூர்யா நன்கொடையாக வழங்கியுள்ளார். அகரம் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சேர்ந்து சூர்யா காசோலை வழங்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சூர்யாவின் பெருந்தன்மையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அகரம் அறக்கட்டளை
ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவதோடு, கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2006 ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளையை நடிகர் சூர்யா தொடங்கினார். இந்த அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான பட்டதாரி மாணவர்களை அவர் உருவாக்கி வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் சூர்யாவை பாராட்டி வருகின்றனர்.
