Actor Suriya: ‘இரத்தம் கொடுங்க என் அன்பான ஃபேன்ஸ்..’ - சொன்ன வாக்கை காப்பாற்றிய சூர்யா.. வைரலாகும் போட்டோஸ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Suriya: ‘இரத்தம் கொடுங்க என் அன்பான ஃபேன்ஸ்..’ - சொன்ன வாக்கை காப்பாற்றிய சூர்யா.. வைரலாகும் போட்டோஸ்!

Actor Suriya: ‘இரத்தம் கொடுங்க என் அன்பான ஃபேன்ஸ்..’ - சொன்ன வாக்கை காப்பாற்றிய சூர்யா.. வைரலாகும் போட்டோஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 15, 2024 07:12 PM IST

Actor Suriya: சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர். ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார்.

Actor Suriya: ‘இரத்தம் கொடுங்க என் அன்பான ஃபேன்ஸ்..’ - சொன்ன வாக்கை காப்பாற்றிய சூர்யா.. வைரலாகும் போட்டோஸ்!
Actor Suriya: ‘இரத்தம் கொடுங்க என் அன்பான ஃபேன்ஸ்..’ - சொன்ன வாக்கை காப்பாற்றிய சூர்யா.. வைரலாகும் போட்டோஸ்!

இரத்ததானம் செய்த ரசிகர்கள் 

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400 க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். 

மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர். ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார். 

உறுதியை நிறைவேற்றிய சூர்யா 

கடந்த ஆண்டு 2000க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும், தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். 

அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில், இன்று அவர் ரத்த தானம் செய்து, ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.நடிகர் சூர்யாவின் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

முன்னதாக, சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யாவின் 44 வது திரைப்படம் அறிவிப்பு தொடர்பான வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே கமிட் செய்யப்பட்டு இருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கருணாகரன், ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் கமிட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

சூர்யா 44 படம் குறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசும் போது, “ இந்தக்கூட்டணி குறித்தான ரகசியத்தை பாதுகாப்பது என்பது மிக மிக முக்கியமானது. திரைத்துறையில் தற்போது அதிகமான அளவில் தகவல் கசிவு நடந்து வருகிறது. அதனால் சரியான தருணம் வரும் வரை இந்த கூட்டணி தொடர்பான ரகசியத்தை நாங்கள் பாதுகாத்து வந்தோம்.

இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்து வருகிறது. இந்தக் கூட்டணி அவர்களின் கலை குறித்தான பார்வையை உயிர்பிப்பதற்காக சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது.” என்று பேசினார்.

கங்குவா நிலைமை

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.வில்லனாக அண்மையில் அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: