சம்மர் வெகேஷனை அப்பாவோடு கொண்டாடும் சூர்யா மகள் தியா.. கண்களில் ஹார்ட் விடும் ரசிகர்கள்!
நடிகர் சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா, தனது சம்மர் வெகேஷனை தன் தந்தையோடு செலவிட்டு வரும் வீடியோக்களும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகர் சூர்யாவும் அவரது மகள் தியாவும் சமீபத்தில் பொது இடத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர். இது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும், இன்னும் பெயரிடப்படாத சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ள சூர்யாவுடன் அவரது மகளும் சென்றுள்ளார். அவர்கள் இருவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஹைதராபாத்தில் சூர்யா, தியா
நட்சத்திர தம்பதியான ஜோதிகா மற்றும் சூர்யாவின் மகள் தியா சமீபத்தில் மும்பையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவர் மிக அரிதாகவே தனது பெற்றோருடன் பொது இடங்களில் காணப்படுவார். இந்த நிலையில், அவரை தனது தந்தையுடன் பார்த்ததில் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஹைதராபாத் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட இவர்கள் இருவரின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சூர்யா சாம்பல் நிற டி-ஷர்ட்டிலும் தியா நீல நிற டி-ஷர்ட்டிலும் இருந்தனர். இருவரும் விமான நிலையத்தில் நடந்து சென்றனர்.