'5 நிமிஷம் முன்னாடியே படம் பாக்க வாங்க.. இல்லைன்னா மிஸ் பண்ணிடுவிங்க'- ஹைப் கொடுத்த சுராஜ்
வீர தீர சூரன் படத்தினை பார்க்க தியேட்டருக்கு 5 நிமிடம் முன்னதாகவே வாங்க. படத்தின் முதல் ஷாட்டை மிஸ் பண்ணாதீங்க என நடிகர் சுராஜ் கூறி ரசிகர்களுக்கு ஹைப் ஏற்றி உள்ளார்.

வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், '' மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய திரையுலக பயணத்தில் ' வீர தீர சூரன் 'மிக முக்கியமான படமாக இருக்கும். இது போன்ற திறமையான நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியாது. எனக்கு கிடைத்திருக்கிறது.
மிகப்பெரிய மேடை
இது எனக்கு மிகப்பெரிய மேடை என நினைக்கிறேன். விக்ரம் சார் நடித்த படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்கிறேன். சினிமாவுக்காக அவருடைய அர்ப்பணிப்பு என்பது போற்றத்தக்கது. அவருடைய உழைப்பு... அனைவருக்கும் மோட்டிவேஷனலாக இருக்கும்.
வாழ்க்கைக்கான காதல் பாடல்
என் வாழ்க்கைக்கு ஒரு காதல் பாடலை அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஜீ.வி. பிரகாஷ் குமார். எஸ். ஜே. சூர்யாவுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம். இன்னும் நிறைய படங்களில் அவருடன் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் 27ஆம் தேதியன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
வாய்ப்புக்கு நன்றி
நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், '' எனக்கு தமிழும், தமிழ் சினிமாவும் மிகவும் பிடிக்கும். இந்த ஆடியோ விழாவில் தான் ஜீ.வி. சாரை நேரில் சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் சார். நானும் உங்கள் ரசிகன் தான். உங்களுடைய இசையில் வெளியான' கோல்டன் ஸ்பேரோ..' என்னுடைய ஃபேவரைட் சார். தமிழ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றி. அவர் உண்மையான மனிதன். தங்கமான மனிதன்.
ரசிகராக மாறிவிட்டேன்
அவருடைய இயக்கத்தில் வெளியான 'சித்தா' படத்தை பார்த்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த படத்தில் பணியாற்றிய போது 'சித்தா' படத்தை விட வேற லெவலில் அவருடைய உழைப்பு இருந்ததை பார்க்க முடிந்தது. அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகனாகவும் மாறிவிட்டேன். இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் கற்றுக் கொள்கிறேன்
நான் தற்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழை பேச கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணமே இயக்குநரும், இந்த படக் குழுவினரும் தான். இந்தப் படம் வெளியான பிறகு இயக்குநருக்கு நான் மலையாளம் சொல்லித் தருவேன்.
நான் ரசிகன்
விக்ரம் சார் மிகப் பெரிய நடிகர் என அனைவருக்கும் தெரியும். அவருடன் நடிக்கும்போது அவர் நடித்த கதாபாத்திரங்கள் எனக்கு வரிசையாக நினைவுக்கு வந்தது. அதுபோன்ற கதாபாத்திரத்தை எல்லாம் இவர் தானே நடித்தார் என்று அவரை நான் வியந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். நானும் உங்களின் ரசிகன் தான்.
எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான 'நியூ 'படம் பார்த்த பிறகு அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். அதற்குப் பிறகு அவர் வெரைட்டியான கேரக்டரில் நடித்தார். பிறகு அவருடைய நடிப்பிற்கும் நான் ரசிகன் ஆகிவிட்டேன்.
5 நிமிஷம் முன்னாடியே வாங்க
இந்த படத்திற்காக மார்ச் 27ஆம் தேதியன்று வெளியாகிறது. திரையரங்கத்திற்கு நீங்கள் வரும்போது உங்கள் நண்பர்களையும், குடும்ப உறுப்பினர்களையும், அனைவரையும் அழைத்துக் கொண்டு வர வேண்டும். இது என்னுடைய பணிவான வேண்டுகோள். ''இந்த படம் ஒரு தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் மூவி தான். சாதாரண படம் அல்ல . ஃபர்ஸ்ட் சீனிலிருந்து இல்ல.. ஃபர்ஸ்ட் ஷாட்ல இருந்தே கதை ஆரம்பிச்சுடும். அதனால இந்த படம் பார்க்கும்போது அஞ்சு நிமிஷம் முன்னாடியே தியேட்டருக்கு வந்துடுங்க. டோன்ட் மிஸ் பர்ஸ்ட் ஷாட்'' என்றார்.
