போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி யார்? ஆப்பிரிக்க இளைஞர் சிக்கியது எப்படி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி யார்? ஆப்பிரிக்க இளைஞர் சிக்கியது எப்படி?

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி யார்? ஆப்பிரிக்க இளைஞர் சிக்கியது எப்படி?

Kalyani Pandiyan S HT Tamil
Updated Jun 24, 2025 10:31 AM IST

அவர்களிடம் நடத்தபட்ட விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து 1 கிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி யார்? ஆப்பிரிக்க இளைஞர் சிக்கியது எப்படி?
போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி யார்? ஆப்பிரிக்க இளைஞர் சிக்கியது எப்படி?

அதிமுக நிர்வாகி வழியாக நடந்த சப்ளை

முன்னதாக, பார் மோதலில் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி பிரசாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது தொலைப்பேசியில் இருந்த தகவல்களின் அடிப்படையில் அவர் போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அதற்கு உதவியாக இருந்த பிரதீப் என்பவரும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து 1 கிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

8 முறை போதைப்பொருள் வாங்கிய ஸ்ரீகாந்த்

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரசாத் மூலமாக ஸ்ரீகாந்த் 8 முறை போதைப் பொருளை வாங்கி இருப்பது தெரியவந்தது. இதே போல பிரசாத் வேறு யாருக்கெல்லாம் போதைப்பொருளை வாங்கிக்கொடுத்திருக்கிறார் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

பாரில் நடந்த தகராறு, வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி என 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருக்கும் பிரசாத்தை, போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருக்கின்றனர். அந்த விசாரணையில் மேலும் சினிமா நட்சத்திரங்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு பின்னணி

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, நண்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவரை நுங்கம்பாக்கம் போலீசார் போதைப்பொருள் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கின்றனர்.

யார் மூலம் சப்ளை

அ.தி.மு.க பிரமுகர் பிரசாத் என்பவரிடம் போலீஸார் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிரதீப் என்பவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சினிமா பார்ட்டிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்தது அம்பலமானது.

மற்றொரு நடிகர்

குறிப்பாக பிரதீப் தனது வாக்குமூலத்தில் நடிகர் ஸ்ரீகாந்தும், மற்றொரு நடிகரும் ( நடிகர் கிருஷ்ணா என்று சொல்லப்படுகிறது) தன்னிடம் பிரசாத் மூலம் கொக்கைன் போதைப்பொருளைப் பெற்று பயன்படுத்தியதை நேரடியாகவே பார்த்திருப்பதாகவும், ஸ்ரீ காந்திற்கு 1 கிராம் கொக்கைன் போதைப்பொருளை 12 ஆயிரத்திற்கு விற்றதாகவும், ஜிபே மூலம் அவரிடம் இருந்து 4 . 2 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், 40 முறை பிரசாத்துக்கு போதைப்பொருள் விநியோகம் செய்திருப்பதாகவும் கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

உறுதி செய்த போலீஸ்

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் அவரின் இரத்தமாதிரிகளை சேகரித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகளில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு நடிகரிடம் விசாரணை நடந்து வருகிறது.