'உங்க ட்ரோல் எல்லாம் என்ன ஒன்னும் செய்யாது.. தகுதி எல்லாம் எங்க இருந்து வந்தது'.. சூடான ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த், தினசரி படத்தில் தன்னுடன் நடித்துள்ள சிந்தியா லூர்ட்தேக்கு எதிராக வரும் ட்ரோல்களுக்கு பதிலளித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் நீண்ட நாட்களுக்கு பின் தினசரி எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகியாக தயாரிப்பாளர் சிந்தியா லூர்ட்தே நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிவப்புகளும் பாடலும் வெளியான நிலையில் பலரும் ஸ்ரீகாந்த் மார்கெட் போனதால் தான் இந்த மாதிரியான ஹீரோயின்களுடன் எல்லாம் நடிக்கிறார் என கிண்டல் செய்தனர்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் இந்த ட்ரோல்கள் குறித்து எஸ்எஸ் மியூசிக் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
வெறுப்ப காட்டுறாங்க
அதில், "சோசியல் மீடியாவுல நல்ல பக்கங்களும் இருக்கு. கெட்ட பக்கங்களும் இருக்கு.. இந்த சோசியல் மீடியா ட்ரோலுக்கு எல்லாம் நான் டிஸ்ட்ரப் ஆக மாட்டேன். எல்லாருக்கும் வெறும் நெகட்டிவ் சிந்தன மட்டும் தான். எல்லாம் மன அழுத்தத்துல இருக்காங்க. அதனால தான் எல்லாம் இந்த மாதிரி வெறுப்ப காட்டிட்டு இருக்காங்க.
எனக்கு தெரிஞ்சு மக்கள் எல்லாம் கொஞ்சம் அன்பு காட்டுனா நல்லா இருக்கும். என்ன பிரச்சனை அந்த பொன்னுக்கு. அந்தப் படம் வந்ததுக்கு அப்புறம் பாருங்க. ரொம்ப நல்ல கன்டன்ட் இருக்கு படத்துல. இந்த படத்துக்கு மியூசிக் ராஜா சார். அந்த பாட்ட எழுதுனதும் ராஜா சார் தான்.
இவங்க எல்லாம் யாரு
எனக்கு அந்த கன்டென்ட் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. அவங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. யாரு முடிவு பண்றது இதெல்லாம். இவங்க தான் நடிக்கணும். இவங்களுக்கு தான் அந்த தகுதி எல்லாம் இருக்குன்னு சொல்றது யாரு. யாருக்கு அந்த உரிமை இருக்கு.
இது சுதந்திரமான உலகம். இவங்க இதத்தான் செய்யணும்ன்னு சொல்ல மத்தவங்க யாரு. எனக்கு இன்னும் என்ன புரியலன்னா நடிகைங்கன்னா இப்படி தான் இருக்கணும்ங்குற பென்ச் மார்க் வைக்குறது யாரு.
வெறி புடிச்சி இருக்கோம்
எப்படி சொல்றாங்க. நான் சினிமாவுக்கு தகுதியானவங்கன்னு. இதுல புரிஞ்சிக்க வேண்டியது என்னென்னா அவங்களாவது இவ்ளோ ட்ரோலையும் மீறி படத்துல நடிக்க வந்துட்டாங்க. ஆனா பேசிட்டே இருக்க நீங்க எங்க இருக்கீங்க. தயவு செஞ்சு பாகுபாடு காட்டாதீங்க. நாம எல்லாம் கொஞ்ச நாளா நிறவெறி புடிச்சி இருக்கோம். மத்தவங்ககிட்ட அதிகம் பாகுபாடு காட்டிட்டு இருக்கோம். மத்தவங்களோட தோற்றத்த கிண்டல் பண்ணிட்டு இருக்கோம். தயவு செஞ்சு இந்த மாதிரி பண்ணாதீங்க. உங்களோட நேரத்தையும் சிந்தனையும் நல்ல விஷயத்துக்கு உபயோகப்படுத்துங்க.
என்ன எதுவும் செய்யாது
நான் இப்போ வரைக்கும் சோசியல் மீடியாவுல இல்ல. அதுனால என்ன வேணும்ன்னாலும் எழுதிகோங்க. என்ன வோணும்ன்னாலும் பேசுங்க. எதுவும் என்ன தொந்தரவு செய்யவே செய்யாது.
என்ன பத்தி வந்த எந்த மீம் பத்தியும் எனக்கு தெரியாது. நெகட்டிவிட்டிய தூக்கி எரிஞ்சி்ட்டு போயிட்டே இருக்கணும். ஒரு மனுஷனா நாம எவ்ளோ தைரியமாவும் உறுதியாவும் இருந்தாலும் ஏதாவது ஒரு விஷயம் நம்மள பாதிக்கும். அதனால என்ன பாதிக்குற எல்லா விஷயத்தில இருந்தும் நான் தள்ளிப் போறேன். நான் சோசியல் மீடியாவுல இருந்து வெளிய வந்து 16 வருஷசத்துக்கு மேல ஆகுது.
அவர் கடவுள்
இந்த படத்துல இளையராஜா சாரோட இசையில நடிச்சிறுக்கேன். இளையராஜா சாரோட டாப் 100 பாடல்கள்ல டாப் 10ல என்னோட படத்தின் பாட்டு இருக்கு. அதை அவரே அடிக்கடி ஸ்டேஜ்ல பாடிருக்காரு. ஒன்னு காற்றில் வரும் கீதமே பாட்டு, அப்புறம் நீ தூங்கும் நேரத்தில், கஜிராஹோ கனவிலோ பாட்டு.
காற்றில் வரும் கீதமே பாட்டு ராஜா சாருக்கே ரொம்ப பிடிச்ச பாட்டு. அது எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு. நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும். அவரு எத்தன தலைமுறைய பாத்திருக்காரு. இவரு கடவுளோட அதிசயம். அதுமட்டுமில்ல அவரே கடவுள் தான். இசைக் கடவுள் தான்.
நான் அன்னைக்கு நடிச்ச படத்துக்கும் பாட்டு போட்டுருக்காரு. இன்னைக்கும் போட்ருக்காரு. இந்த படத்துல ஒரு குத்து பாட்டு இருக்கும். அதுக்கும் ராஜா சார் தான் மியூசிக் போட்ருக்காரு. அவரா போட்டாரு அப்டிங்குற மாதிரி இருக்கும். ஒரு மனுஷன் எல்லா விதமான உணர்ச்சிக்கும் மூடுக்கும் தகுந்த மாதிரி பாட்டு போட்டுருக்காரு. ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே ராஜா சார் தான்" என்றார்.
டாபிக்ஸ்