Actor Srikanth: தாடியால் வந்த ரோதனை…கன்னாபின்னாவென்று திட்டிய ஷங்கர்.. முட்டிக்கொண்ட வந்த கண்ணீர்! - ஸ்ரீகாந்த்
Actor Srikanth: என்னை பார்த்து கடுமையாக அப்செட் ஆன அவர், நீங்கள் ஒரு சீனியர் நடிகர்; நீங்கள் எப்படி இப்படி செய்யலாமா என்று கன்னாபின்னாவென்று கத்திவிட்டார். நான் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டேன். -ஸ்ரீகாந்த்
Actor Srikanth: நண்பன் திரைப்படத்தில் தன்னால் நடைபெற்ற குளறுபடி குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் கலாட்டா சேனலுக்கு பேசினார்.
தாடியை ஷேவ் செய்த ஸ்ரீகாந்த்
அவர் பேசும் போது, “ நண்பன் திரைப்படத்தின் போது, வழக்கம்போல அன்று நடக்கும் காட்சிக்காக, தாய்லாந்தில் இருந்து சென்று கொண்டிருந்தேன். அன்றைய தினம் படப்பிடிப்பில், கல்லூரி சம்மந்தப்பட்ட காட்சி எடுக்கப்போகிறீகளா? இல்லை வேறு காட்சியை என்று அந்தப்படத்தின் அசோசியேட் டைரக்டரிடம் கேட்டேன்.
அவரும் கல்லூரி போர்ஷன்தான் என்று சொல்லி விட்டார். இந்த நிலையில் நான் படப்பிடிப்பில் சென்று ஏன் ஷேவ் செய்ய வேண்டும் என்று கூறி, முன்னமே ஷேவ் செய்து சென்று விட்டேன். என்னை படப்பிடிப்பில் இருந்த ஷங்கர் பார்த்து கடுமையாக கோபமடைந்து, பயங்கரமாக திட்டிவிட்டார்.
கேன்சல் ஆன ஷூட்டிங்
என்னை பார்த்து கடுமையாக அப்செட் ஆன அவர், நீங்கள் ஒரு சீனியர் நடிகர்; நீங்கள் எப்படி இப்படி செய்யலாமா என்று கன்னாபின்னாவென்று கத்திவிட்டார். நான் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டேன். கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. நான் ஷங்கர் சாரை அப்படி பார்த்ததே கிடையாது.
இதையடுத்து நான் எனக்கு சொன்னவரிடம், இது குறித்து கேட்க போனால், அவர் ஏதோதோ சொல்லி சமாளித்து, பொய் கூறி நழுவி விட்டார். அன்று ஷீட்டிங்கே கேன்சல் ஆகி விட்டது. என்னுடைய தாடியால் 6 மாதத்தில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பு 8 மாதமானது. ஆனால் ஷங்கரிடம் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து மேனஜர் சென்று கூறி விட்டார்." என்று பேசினார்.
முன்னதாக, விஜய்க்கும், அவரது தங்கை வித்யாவுக்கும் இடையே இருந்த பிணைப்பு குறித்து எஸ்.ஏ.சி பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசினார். அந்த பேட்டி இங்கே!
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட குழந்தை
இது குறித்து அவர் பேசும் போது, “நான் அப்போது அசிஸ்டண்ட் டைரக்டர், ஷோபா மேடைப் பாடகி. எங்களுடைய வாழ்க்கை அன்று அப்படித்தான் இருந்தது. எக்மோர் அரசு மருத்துவமனையில்தான் விஜய் பிறந்தார். அவர் பிறக்கும் போது, அவர் இவ்வளவு அதிஷ்டமான குழந்தையாக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கும் அவரது தங்கைக்குமான உறவு அப்படி இருந்தது. பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் விஜய், அழுக்குத்துணி வைக்கும் கூடையில் வித்யாவை தூக்கி வைத்து விளையாடுவார். நாங்கள் கீழே விழுந்து விடுவாள் என்று பதறுவோம். ஒரு முறை கீழே கூட விழுந்தது என்று நினைக்கிறேன்.
அப்போது கூட அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை. விஜய் போன்ற குழந்தையை எனக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி. விஜயை நினைத்து, நினைத்து தினம் தினம் பெருமை படுகிறோம். 1991ம் ஆண்டு, அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் நான் வேறு விதமாக நினைத்திருந்தேன். ஆம் , நான் விஜயை ஒரு டாக்டராக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். காரணம் என்னவென்றால், விஜயின் தங்கை வித்யா லுகேமியாவால் இறந்தாள்.
டாக்டராக்க ஆசைப்பட்டேன்
ஆகையால் அதில், விஜயை சிறப்பு வாய்ந்த டாக்டராக மாற்றி, பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்று நினைத்தேன். காரணம், வித்யா எங்களை விட்டுச் சென்ற போது அவளுக்கு வெறும் 3 1/2 வயது. அந்த மாதிரியான இழப்பு யாருக்கும் வந்து விடக்கூடாது என்றுதான் அப்படி நினைத்தேன். ஆனால் விஜய் நான் நடித்தே தீருவேன் என்று பிடிவாதமாக நின்றார். ஒரு முறை முடிவெடுத்துவிட்டால், தன்னுடைய பேச்சை தானே கேட்கமாட்டேன் என்று அவர் கூறுவது, அன்றே அவருக்கு இருந்த பிடிவாத குணமாகும்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்