‘சூர்யா இடத்துல நான்தான்… கட்டையை போட்ட சித்தப்பா.. கோபத்தின் கொப்புக்கு சென்ற மணிரத்னம் - நொந்து பேசிய ஸ்ரீகாந்த்
மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் சூர்யா ரோலில் தானே முதலில் நடிக்க இருந்ததாக ஸ்ரீகாந்த் பேசி இருக்கிறார்
நடிகர் ஸ்ரீகாந்த், மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படம் எப்படி மிஸ் ஆனது என்பது குறித்து, அண்மையில் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “மனசெல்லாம் திரைப்படத்தில் நானும், த்ரிஷாவும் நடித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் மெட்ராஸ் டாக்கீஸிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அங்குதான் நான் மணிரத்தினத்தை முதன் முறையாக சந்தித்தேன். என்னை அவர் டெஸ்ட் ஷூட் செய்தார். முதலில் சூர்யா சாரின் ரோலுக்காக டெஸ்ட் செய்தார்கள். ஒரு புல்லட்டை நான் ஓட்டுவது போலவும், பின்னால் ஹீரோயின் உட்கார்ந்திருப்பது போலவும் அந்த காட்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அதன் பின்னர் சித்தார்த் ரோலுக்காக அப்போது அவரிடம் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்கராவிடம் நான் டயலாக் சொல்லிக் கொண்டிருந்தேன். எங்கள் யாருக்கும் கதை தெரியாது. ஒப்பந்தம் போடும்போதுதான் அங்கு கதை சொல்லப்படும். எனக்கு நீண்ட நாட்களாக, ஒரு சிட்டி பாய் ரோலை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. அதைத்தான் அங்கு சித்தார்த் ரோலில் வடிவமைத்திருந்தார்கள். இதையடுத்துதான் நான் அதில் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருந்தேன்.
மணி சார் அப்படி இருப்பார்
படப்பிடிப்பில் மணி சாரை பார்ப்பதற்கு அப்படி இருக்கும். அவரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும். எல்லோரும் அவ்வளவு கவனமாக வேலை செய்வார்கள். அப்போதுதான் பெரிய டைரக்டர் என்றால், இப்படித்தான் இருப்பார்களோ என்று நான் தெரிந்து கொண்டேன். மணிரத்னம் பேசும்போது கூட, மிகவும் லோ வாய்ஸில் தான் பேசுவார். நான் அதை மிகவும் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பேன். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த மேக்கப் மேன் பாலச்சந்தரிடம் இருந்தவர். அவர் எல்லாவற்றையும் கவனமாக கேள். அதையெல்லாம் மணிசார் மிக உன்னிப்பாக கவனிப்பார் என்று கூறினார்.
இதற்கிடையேதான் எனக்கு அடிபட்டு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டேன். இதற்கிடையில், என்னைக்கேட்காமல் அப்போது மேனஜராக இருந்த என்னுடைய சித்தப்பா, என்னை கேட்காமல் மணி சாரின் படத்திற்கு நான் வாங்கிய அட்வான்ஸ்யை திருப்பிக் கொடுத்து விட்டார். நான் உடல் நலம் சரியில்லாமல் இருந்து போது மணி சாரிடம் இருந்து எனக்கு தினமும் ஒரு பூங்கொத்து வரும்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன்
அவர் எனக்காக காத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அது வருவது நின்று விட்டது. அது குறித்து நான் கேட்ட போது படம் கையை விட்டு சென்று விட்டதாக அப்பா கூறினார். ஏன் என்று கேட்ட போது, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தன்னுடைய படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தான் மணிரத்னம் படத்திற்கு ஸ்ரீகாந்த் செல்ல வேண்டும் என்று கறாராக சொல்லியதும், அதன் காரணமாக சித்தப்பா அட்வான்ஸை திருப்பிக்கொடுத்ததும் தெரியவந்தது. அதற்காக நான் மேனஜரை குறை சொல்லவில்லை. காரணம், அவருக்கு நான் அந்த அளவு சுதந்திரம் கொடுத்து இருக்கக்கூடாது. அதை நான் அந்த படத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.
மணிரத்னம் மனிதாபிமான முறையில் எனக்காக அவ்வள நாட்கள் காத்திருந்திருக்கிறார். ஆனால் என் தரப்பில் இருந்து, அதை சொல்ல வேண்டிய முறையில் நாங்கள் சொல்லி இருக்க வேண்டும் ஆனால், அப்படி நடக்கவில்லை. சொன்ன விதம் அங்கு தவறாக சென்று விட்டது. அதில் அவர் மிகவும் கோபமடைந்து விட்டார்” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்