Dinasari Movie OTT Release: ஓடிடி ரிலீஸிற்கு தயாராகும் ஸ்ரீகாந்த்தின் தினசரி படம்.. விட்டதை பிடிக்குமா?
Dinasari Movie OTT Release: பல்வேறு ட்ரோல்களை சந்தித்த நடிகர் ஸ்ரீகாந்த்தின் தினசரி படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

Dinasari Movie OTT Release: பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருக்கும் தமிழ் திரைப்படம் ‘தினசரி’ இந்த வாரம் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்த குடும்ப நாடகத் திரைப்படம் டென்ட் கோட் ஓடிடி தளத்தில் விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் ஸ்ட்ரீமிங் விவரங்களை ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கதாநாயகியான தயாரிப்பாளர்
ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் சிந்தியா லூர்தே நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை சிந்தியாவே தயாரித்தும் உள்ளார். ஜி.சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்ததுடன், பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். நடிகர்கள் வினோதினி, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.
கலவையான விமர்சனம்
இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் கலவையான வரவேற்பை தான் பெற்றுள்ளது. கதைக்கரு, நாயகன்-நாயகி இடையிலான கெமிஸ்ட்ரி, இளையராஜாவின் இசை என அனைத்தும் நன்றாக இருந்தும். படத்தை பார்க்க மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அத்துடன் படத்தை பார்க்காமலே நடிகர் நடிகைகளின் தோற்றத்தை மட்டுமே வைத்து படத்தை விமர்சித்து வந்தனர்.
தினசரி படத்தின் கதை
திருமண விஷயத்தில் இளைஞர்களின் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன? கணவன்-மனைவி இருவரும் வேலை செய்வது அவசியமா என்பது போன்ற விஷயங்களை விறுவிறுப்பாக இந்த தினசரி படம் காட்டுகிறது.
நிபந்தனை திருமணம்
சக்திவேல் ஒரு நடுத்தர வர்க்க இளைஞன். அவனுக்கு திருமணம் பற்றி சில குறிப்பிட்ட எண்ணங்கள் இருக்கின்றன. சக்திவேல் வைக்கும் நிபந்தனைகள் காரணமாக அவனது அனைத்துத் திருமண முயற்சிகளும் தோல்வியடைகின்றன. சிவாணி என்ற என்.ஆர்.ஐ. பெண் சக்திவேலை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறாள். திருமணத்திற்குப் பிறகு, சிவாணி வேலைக்குச் செல்ல வேண்டும் என்று சக்திவேல் கூறுகிறான்.
இது 3வது படம்
ஆனால், வீட்டிலேயே இருந்து கணவனின் நலன்களைப் பார்த்துக் கொள்வேன் என்று சிவாணி கூறுகிறாள். அதன் பிறகு என்ன நடந்தது? சிவாணியின் முடிவை சக்தி ஏற்றுக் கொண்டாரா? அவனது வாழ்க்கை எப்படி ஆபத்தில் சிக்கியது? மனைவியின் உதவியுடன் இந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி மீண்டான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. மனசெல்லம், ஒரு நாள் ஒரு கனவு படங்களுக்குப் பிறகு இளையராஜா, ஸ்ரீகாந்த் கூட்டணியில் வெளிவந்த மூன்றாவது படம் இது.
தெலுங்கில் ஸ்ரீராம்...தமிழில் ஸ்ரீகாந்த்...
ஸ்ரீகாந்த் தெலுங்கு சினிமாவில் ஸ்ரீராம் என்ற பெயரில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் நாயகனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஒருரிக்கொருரு, ஆடவாரி மாட்டாலக்கு அர்த்தாலே வேருலே, டென்த் கிளாஸ் டைரிஸ், பிண்டோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஹரிகதா, ரெக்கி என்ற வலைத்தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஆண்டு ‘தினசரி’ படத்துடன், ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருக்கும் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா நாயகியாக நடித்துள்ளார்.

டாபிக்ஸ்