தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Srikanth Birthday Special

Actor Srikanth Birthday: ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகர் ஸ்ரீகாந்த் பிறந்தநாள் இன்று!

Aarthi Balaji HT Tamil
Feb 28, 2024 06:30 AM IST

Actor Srikanth Birthday: நடிகர் ஸ்ரீகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஸ்ரீகாந்த் பிறந்தநாள்
ஸ்ரீகாந்த் பிறந்தநாள்

ட்ரெண்டிங் செய்திகள்

ரோஜாக்கூட்டம் படத்தில் சாக்லெட் பாயாகதான் இருந்தார். சசியின் கதையும் மென்மையாக மனதை வருடிச் சென்றது. முதல் படத்திலேயே, தன்னுடைய கியூட் சிரிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ரீகாந்த்.

அடுத்தடுத்து சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம் படங்கள் அவரது ரொமான்டிக் ஹீரோ இமேஜுக்கு ஆப்டாக அமைந்தன. கரு.பழனியப்பனின் பார்த்திபன் கனவு ஸ்ரீகாந்தின் இரண்டாவது ஹிட் திரைப்படம். இப்படத்திற்கு இவருக்கு தமிழ்நாடு திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.

ரோஜாக்கூட்டம்

ஸ்ரீகாந்த் தனது இடம் அறிந்து அதே தடத்தில் பயணித்திருந்தால் வேறு மாதிரி இருந்திருப்பார். ஆனால், எல்லா நடிகர்களையும் போல ஆக்ஷன் ஹீரோவாக விரும்பியதன் விளைவு விபரீதமானது. ஆக்ஷன் நாயகனாக ஸ்ரீகாந்த் அழகம் பெருமாள் இயக்கத்தில் ஜுட் படத்தில் நடித்தார்.

ஜுட்டில் அப்பாவின் சிகிச்சைக்காக ஸ்ரீகாந்த் சென்னைக்கு வந்து, இங்கேயிருக்கும் ரவுடிகளை புகுந்து அடிப்பது தான் கதை. படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. பூ படத்திற்கு பின்னர், பட சரியான வெற்றிப்படங்கள் அமையாமல் இருந்த ஸ்ரீகாந்த் வில்லன் கதாபாத்திரத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏப்ரல் மாதத்தில்

பின்னர் பார்த்திபன் கனவு வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஆக்ஷன் பேக்ரவுண்டில் ஸ்ரீகாந்த் சதுரங்கம் படத்தில் நடித்தார். சதுரங்கம் 2003 இல் தொடங்கி தயாரிப்பு பிரச்சனையால் 2011 இல் தான் வெளியானது. அடுத்து கமாண்டோவாக போஸ் படத்தில் நடித்தார். அவர் அதிகம் நம்பிய படம். ஆனால், எதிர்பார்த்தது போல் அதுவும் ஓடவில்லை.

ஜுட், வர்ணஜாலம், போஸ் என தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் அவருக்கு கை கொடுத்தது கனா கண்டேன் படம் தான். ஆனால் இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகும் ஸ்ரீகாந்துக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் வரவில்லை.

ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு என அதே தடத்தில் பயணித்திருந்திருந்தால் ரொமான்டிக் ஏரியாவில் தடம் பதித்திருப்பார். தனக்கு ஒத்துவராத ஆக்ஷனை தேர்ந்தெடுத்தது ஸ்ரீகாந்தின் கரியரையே தடுமாறச் செய்தது.

பார்த்திபன் கனவு

இவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் சிலகாலம் வாய்ப்புகள் இல்லாமல் தவித்த ஸ்ரீகாந்துக்கு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அப்போது செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ஆடவாரி மாடலாகு அர்த்தளு வெருலே என்ற தெலுங்கு படம் மிகப் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து ஸ்ரீகாந்த் நடிகர் விஜய்யுடன் இணைந்து இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான நண்பன் என்ற படத்தில் நடித்தார்.

நண்பன்

கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் வெளியான மஹா மற்றும் காபி வித் காதல் ஆகிய இரண்டு படங்கங்களும் தோல்வியை தழுவியது. தன்னுடைய அடுத்தடுத்த வெற்றி படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ரீகாந்த் மீண்டும் சாக்லெட் பாயாக திரையில் தோன்றி பல வெற்றிகள் பெற அவரின் பிறந்தநாளான இன்று வாழ்த்துவோம். ஹேப்பி பர்த்டே ஸ்ரீகாந்த்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்