Actor Sri: ‘அவ்வளவு பிரச்சினைகள்.. அப்போதே சினிமாவை விட்டு போயிடலாம்னு நினைச்சேன்’ - நடிகர் ஸ்ரீ த்ரோபேக் பேட்டி
Actor Sri: மற்றவர்கள் போல நான் நடித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்ய வில்லை. தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, ரேடியோ உள்ளிட்டவற்றில் வேலை பார்த்தேன். இந்த நிலையில்தான் கனா காணும் காலங்கள் சீரியலுக்கான ஆடிஷன் செல்வதாக நண்பர் ஒருவர் சொன்னார். - - பேட்டி!

Actor Sri: இன்று கோலிவுட்டே நடிகர் ஸ்ரீயை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறது. காரணம், கடந்த சில நாட்களாக அவர் பதிவிட்டு வரும் புகைப்படங்களும் வீடியோக்களும்தான். அரைகுறை ஆடையோடு அவர் பதிவிட்டு வரும் பதிவுகளை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு என்று ஷாக்காகி நிற்கின்றனர். இந்த நிலையில், தான் யார்? எப்படி சினிமாவிற்குள் நுழைந்தேன் உள்ளிட்ட விபரங்களை கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நடிகர் ஸ்ரீ பகிர்ந்திருந்தார். அந்தப்பேட்டியை இங்கே பார்க்கலாம்.
அதில் அவர் பேசும் போது, ‘என்னுடைய வீட்டில் யாரும் சினிமா பின்னணி கொண்டவர்கள் கிடையாது. ஆனால் எனக்கு அடிப்படையிலேயே சினிமா மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தது. நான் விஸ் காம் படித்தேன். அங்கு முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படத்திற்கான ஆடிஷன் செல்வதாக சொன்னார்கள். அதில் சும்மா கலந்து கொண்டேன். ஆனால், அதன் பின்னர் எனக்கு அங்கிருந்து போன்கால் வரவே இல்லை.. நானும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
