நடிகர் ஸ்ரீ: ‘அவனோட நிர்வாண வீடியோவ பார்த்தப்ப.. ஸ்ரீக்கு இந்த நோய்தான் மாத்திரைய நிப்பாட்டுனா’ -நடிகர் ஸ்ரீ தோழிபேட்டி!
நடிகர் ஸ்ரீ: நடிகர் ஸ்ரீக்கு மூளையில் பிரச்சினை இருந்திருக்கலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும், அதனை அதிகரிக்கக்கூடிய சூழ்நிலையில்தான் அவன் தொடர்ந்து இருந்திருக்கிறான். - தோழி பேட்டி!

Actor Sri: இன்று கோலிவுட்டே நடிகர் ஸ்ரீயை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறது. காரணம், கடந்த சில நாட்களாக அவர் பதிவிட்டு வரும் புகைப்படங்களும் வீடியோக்களும்தான். அரைகுறை ஆடையோடு அவர் பதிவிட்டு வரும் பதிவுகளை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு என்று ஷாக்காகி நிற்கின்றனர். இந்த நிலையில் அவருக்கு என்ன ஆனது, அவர் தற்போது எப்படி இருக்கிறார், எங்கு இருக்கிறார் உள்ளிட்ட விபரங்களை அவருடைய தோழி டாட்டி டேவிட் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார். அதன் விபரங்களை இங்கே பார்க்கலாம்.
இது குறித்து அவர் பேசும் போது, ‘நடிகர் ஸ்ரீக்கு மூளையில் பிரச்சினை இருந்திருக்கலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும், அதனை அதிகரிக்கக்கூடிய சூழ்நிலையில்தான் அவன் தொடர்ந்து இருந்திருக்கிறான்.
அவனுடைய வாழ்க்கை அதை நோக்கிதான் சென்று கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவனை சுற்றி இருக்கக்கூடிய ஆட்களாக இருக்கலாம். திரைத்துறையில் அவன் சந்தித்த தோல்விகளும் ஏமாற்றங்களுமாக இருக்கலாம். அவன் என்னிடம் மிகவும் எமோஷனலான விஷயங்களை பேசுவான். என்னுடைய மடியில் படுத்து கூட அவன் அழுது இருக்கிறான். குறிப்பாக, வில் அம்பு திரைப்படத்தில் அவனுக்கான சம்பளம் முறையாக கொடுக்கப்படவில்லை என்று அவன் என்னிடம் அழுது இருக்கிறான்.
என்ன நோய்?
என்னுடைய தோழி ஒருவர் இருக்கிறார். அவரிடம்தான் தன்னுடைய உடல்நலம் சார்ந்த தகவல்களை ஸ்ரீ பகிர்ந்திருக்கிறான். அதுவும் அவள் அவனை வலுக்கட்டாயமாக பிடித்து கேட்டதாலேயே வழியில்லாமல் கூறினான்.
அப்போதுதான் அவனுக்கு schizophrenia என்ற நோய் இருப்பதை கூறினான். மேலும், அவன் தன்னுடைய காதில் குரல் ஒன்று கேட்கிறது என்றும் அந்தக் குரல் உண்மை இல்லை என்பது தெரிந்தாலும், அதனை தன்னால் தடுக்க முடியவில்லை என்றும் கூறி இருக்கிறான்.
அவனின் நிர்வாண வீடியோவை நானும் பார்த்தேன். அதனை பார்த்த போது, எனக்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியாமல் இருந்தது. அவன் தற்போது முழுக்க முழுக்க கனவுலகில் வாழ்ந்து வருகிறான். அவன் தனக்கான மாத்திரைகளை நிறுத்தும் போது இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துவான்.
ஸ்ரீ இருக்கும் இடம் எது?
அவன் இப்போது குருகிராம் என்ற இடத்தில் இருக்கிறார்.குறிப்பாக அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பதையும் கண்டுபிடித்தாயிற்று. சீக்கிரமே நெருங்கி விடுவோம். ’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்