Actor Soori: 50 முறைக்கு மேல் பிடிபடாத மாடு.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த சூரியின் காளை.. என்ன பரிசு?
Actor Soori: : 50 முறைக்கு மேல் பிடிபடாத மாடு பெருமையை கொண்டிருக்கும் நடிகர் சூரியின் காளை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களின் பிடியிலிருந்து தப்பித்துள்ளது.

பொங்கல் திருவிழாவில் முக்கிய விஷயங்களில் ஒன்றாக இருப்பது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு. அதிலும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு உலக அளவில் பேமஸ். பொங்கல் நாளில் அவனியாபுரத்திலும், மாட்டு பொங்கல் நாளஇல்ல பாலமேடு கிராமங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான காணும் பொங்கலன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்
சீறி பாய்ந்த சூரியின் காளை
குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்களும், மாடு உரிமையாளர்களும் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண உதயநிதி மகன் இன்பநிதியும் வந்துள்ளார்.
இதையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடிகர் சூரி காளையான ராஜாக்கூர் கருப்பன் பங்கேற்ற நிலையில், கட்டவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசல் தாண்டி சீறி பாய்ந்த சூரியின் கருப்பனை மாடுபிடி வீரர்கள் யாராலும் பிடிக்க முடியவில்லை.
முன்னதாக, சூரியின் காளை வெளியே வந்தபோது, இது நடிகர் சூரியின் காளை என வர்ணனையாளர்கள் அறிவித்தபோது, அங்கிருந்த துணை முதலமைச்சர் உதயநிதி, சூரி வரவில்லையை என கேட்டார்.
மாடுபிடி வீரர்களை மிரள வைத்த சூரியின் காளை சீறி பாய்ந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
50 முறைக்கு மேல் பிடிபடாத கருப்பன்
வாடிவாசலில் அவிழத்து விடுவதற்கு முன்னர் நடிகர் சூரியின் காளையை கட்டவிழத்து விடுவதற்கு வந்த காளையின் பராமரிப்பாளர் கூறயதாவது, "நடிகர் சூரியின் இந்த காளை 50 முறைக்கு மேல் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதுவரை பிடிபடாத மாடாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் இந்த மாடு கட்டவிழ்த்துவிடப்படும். அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. வெற்றியுடன் வாருங்கள் என எங்களை அனுப்பி வைத்துள்ளார்" என்றார்.
இதையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களிடமிருந்து தப்பித்து எல்லையை கடந்த சூரியின் காளை இந்த முறையும் பிடிபடாமல் வெற்றி பெற்றது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
இந்த முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட காளைகளும், 1,698 வீரர்களும் முன் பதிவு செய்துள்ளனர். இதில் 1,100க்கும் மேற்பட்ட காளைகளுக்கும், 900 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளையும் வெற்றி பெற்றது. அவரது காளைக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் சார்பில் களமிறக்கப்பட்ட இரண்டு காளைகளும் வெற்றி பெற்றன.
சூரி பகிர்ந்த விடியோ
கடந்த சில நாள்களுக்கு முன்னர் தனது ஜல்லிக்கட்டு மாடு கருப்பனுடன் இருக்கும் விடியோவை பகிர்ந்திருந்தார் நடிகர் சூரி. அதில், 'பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராகி நிற்கிறான் - ராஜாக்கூர் கருப்பன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று பங்கேற்ற சூரியின் கருப்பன் காளை, மாடுபிடி வீரர்களை மிரள வைத்ததுடன் பிடிபடாத காளை என்ற சாதனையை இந்த ஆண்டும் தக்க வைத்துள்ளது. சூரியை போல் பிரபலங்கள் பலரின் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றிகளையும் குவித்து வருகின்றன.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்