'அஜித் சார் இல்லாமல் எஸ்.ஜே.சூர்யா இல்லை.. அப்போ மதிக்கத்தக்க லுக்கில் இருக்கமாட்டேன்..’: நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'அஜித் சார் இல்லாமல் எஸ்.ஜே.சூர்யா இல்லை.. அப்போ மதிக்கத்தக்க லுக்கில் இருக்கமாட்டேன்..’: நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேட்டி

'அஜித் சார் இல்லாமல் எஸ்.ஜே.சூர்யா இல்லை.. அப்போ மதிக்கத்தக்க லுக்கில் இருக்கமாட்டேன்..’: நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேட்டி

Marimuthu M HT Tamil Published Apr 16, 2025 07:12 AM IST
Marimuthu M HT Tamil
Published Apr 16, 2025 07:12 AM IST

அஜித் சார் இல்லாமல் எஸ்.ஜே.சூர்யா இல்லை என்றும்; அப்போது மதிக்கத்தக்க லுக்கில் தான் இருக்கமாட்டேன் என்றும், அஜித் சார் தன் திறமையை மதித்தார் என்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா உருக்கமான பேட்டியளித்திருக்கிறார்.

'அஜித் சார் இல்லாமல் எஸ்.ஜே.சூர்யா இல்லை.. அப்போ மதிக்கத்தக்க லுக்கில் இருக்கமாட்டேன்..’: நடிகர் எஸ்.ஜே. சூர்யா புகழாரம்
'அஜித் சார் இல்லாமல் எஸ்.ஜே.சூர்யா இல்லை.. அப்போ மதிக்கத்தக்க லுக்கில் இருக்கமாட்டேன்..’: நடிகர் எஸ்.ஜே. சூர்யா புகழாரம்

இதுதொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் டிவி யூடியூப் சேனலில் ஏப்ரல் 15ஆம் தேதி பிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் கேள்விகளுக்கு எஸ்.ஜே.சூர்யா அளித்த பதில்களுடைய தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஓடும்போது எஸ்.ஜே. சூர்யா சிங்கிளாகவே இருக்கீங்களே. அது பிடிச்சுப்போச்சா?

ஆமா(சிரிக்கிறார்). இவ்வளவு பெரிய சுதந்திரத்தை காத்து வைச்சிருக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்.

நான் கேள்விப்பட்டு இருக்கேன். எஸ்.ஜே.சூர்யா ரொம்ப எளிமையாக இருப்பார். வேலை மேல் பிரியமாக இருப்பதால் எஸ்.ஜே.சூர்யா சிங்கிளாகவே இருந்துவிட்டாரா?

அப்படி இல்லை. அடைய வேண்டிய உயரத்தை இன்னும் அடையவில்லை. அதனால் அந்த நினைப்பு வராமல் இருக்கலாம்.

அடைய வேண்டிய உயரம் என்று இருக்குது இல்லையா? அது என்ன?

அது ரொம்பப் பெரிய இடம். சொன்னால், காமெடியாகத்தான் இருக்கும். விருப்பத்தைச் சொல்வது தப்பில்லை. நான் நினைக்கிறது நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். நடந்தாலும் சந்தோஷம். நடக்கலைன்னாலும் சந்தோஷம். ஆனால், நடக்கிற வரைக்கும் அதற்கு நான் முயற்சி செய்துகொண்டே இருப்பேன். கலைத்துறையில் இந்தியாவுக்கு எம்.ஜி.ஆர் ஆகணும். அதுதான் என் கனவு. அது நடக்கலாம். நடக்காமலும் போகலாம். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஒரு தமிழன் இந்தியா முழுக்க சென்று தன்னை நிரூபிச்சான் இருக்கட்டும். அவ்வளவு தானே! அதுக்கு உழைக்கிறது தப்பில்லைல்ல.

ஆரம்ப காலத்தில் இரண்டு பெரிய ஸ்டார்கள், உங்களை நம்பினார்கள். அது எப்படி நடந்துச்சு?

அஜித் சாரிடம் இருந்து தான் தொடங்கியது என் வாழ்க்கை. ஏனென்றால், தமிழ்நாட்டுக்கே தெரியும் அவர் தான் என்னை இயக்குநர் ஆக்கியது. அஜித் சார் இல்லாமல் எஸ்.ஜே. சூர்யா இல்லை. இன்றைக்கு எல்லோரும் மதிக்கத்தக்க ஒரு பொசிஷனில் இருக்கிறேன். அப்போது நான் பார்த்தாலே மதிக்கத்தக்க லுக்கில் நான் இருக்க மாட்டேன்.

அப்படிப்பட்ட லுக்கில் இருந்தபோதும் அஜித் சார் என்னைக் கூப்பிட்டு, எனக்குள் இருக்கும் திறமையை மதிச்சு, எனக்கு இயக்குநராக ஒரு வாய்ப்புக் கொடுத்தார். அதுதான் உறுதியாக. அதனால் துவங்கிய இடம் அதுதான். அதற்கப்புறம், தெலுங்கு குஷி, இந்தி குஷி, அப்படிப்போச்சு.

நல்ல நடிகர்கள் இயக்குநர்கள் ஆகுறாங்க. நல்ல இயக்குநர்கள் நடிகர்கள் ஆகிறாங்க. இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்குறீங்க?

நான் நடிகனாக நான் அடுத்தகட்டத்துக்குப் போகும் காலம் வந்தாச்சு. ரொம்ப நாளைக்கு வில்லனாகவே சுத்திட்டு இருக்கமுடியாது. அதுக்கு நான் வரலை. கில்லர் என்கிற படத்தை டைரக்ட் செய்து நான் நடிக்கப்போறேன். என்னுடைய டைரக்‌ஷனை பார்க்க ஆசைப்படுறவங்களுக்குக் கண்டிப்பாக அது நல்லத் தீனியாகவே இருக்கும்.

கில்லர் படம் எப்படி இருக்கும் சார்?

எஸ்.ஜே.சூர்யா ஒரு இடத்தைத்தொட்டாலே, கண்டிப்பாக வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது தெரியும். என்னை எக்ஸைட் பண்ணாத ஒரு கதையை நான் தொடவே மாட்டேன். முதன்முதலாக என்னை அது சந்தோஷப்படுத்தணும். அப்படி சந்தோஷப்படுத்தியது அந்த கதை. குறிப்பாக, ஆக்‌ஷன், லவ், காமெடி கலந்து இருக்கும் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக அது இருக்கும்.

உங்களுக்கு பிடித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பற்றி சொல்லுங்க?

கமர்ஷியல் தெரிந்த இயக்குநர். உண்மையிலேயே உழைப்பாளிங்க. நேர்மறையான மனிதர். எவ்வளவு சோகத்திலும் பெஸ்ட்டாக உழைக்கக் கூடிய ஒரு ஆளு. மார்க் ஆண்டனி டைமில் சூட்டிங்கில் அவ்வளவு பிரச்னைகள் இருக்கும். அப்ப நான் சொல்வேன். நீங்க கஷ்டப்படுறது கேமரா முன்னாடி நல்லாவே வருது. உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்பேன்னு நின்னேன். எல்லோரும் சப்போர்ட்டாக நின்னாங்க. அது ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமைஞ்சது. இன்னைக்கு பாருங்க, குட் பேட் அக்லியில் அஜித் சாரை நல்லா கொண்டு வந்திருக்கார்’’ என நடிகர் எஸ்.ஜே.சூர்யா பற்றி பேசியிருப்பார்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.