Actor Sivakumar: ‘உங்களையே மிஞ்சிருவான்.. ஆனா’ - அப்படியே பலித்த ஜோசியர் வாக்கு! - காதலுக்கு சிவகுமார் சம்மதித்த கதை!
ஜோசியர் சொன்னது போலவே சூர்யா பெரிய நடிகரானார், அதிக சம்பளம் வாங்கினார், காதல் திருமணமும் செய்து கொண்டார். இதனையடுத்துதான் நாங்கள்அவரை தேடிச் சென்று, வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்தோம்.
சூர்யாவின் வாழ்க்கையை ஜோசியர் ஒருவர் கணித்த கதையை நடிகர் சிவகுமார் கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
அதில் அவர் பேசும் போது, “சூர்யா இளவயதில் மிகவும் அமைதியாக இருப்பார். அவருக்கு எதிலுமே விருப்பம் கிடையாது. இந்த நிலையில்தான் நான் அவருடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் சென்றேன்.
ஜாதகத்தை பார்த்த ஜோசியர் அவர் சினிமாவில்தான் தொழில் செய்வார் என்றார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் என்னவென்றால் சூர்யா யாரிடமும் பெரிதாக பேசக்கூட மாட்டார். அவர் எப்படி இந்த தொழிலில்… என்று நினைத்தேன். இதனையடுத்து நான் ஜோசியரிடம் அவர் என்னவாக வருவார் என்று கேட்டேன்.
அதற்கு அவர் முகத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் தொழில் செய்வார் என்றார். உடனே நான் நடிப்பா? என்று கேட்டேன். அதற்கு அவர் ஆமாம் என்று சொன்னார். உடனே நான் சரி, மேற்படி சொல்லுங்கள் என்று சொன்னேன்
தொடர்ந்து பேசிய அவர், சூர்யா உங்களை விட நல்ல நடிகர் என்று பெயர் வாங்குவார், உங்களை விட அதிக சம்பளம் வாங்குவார், உங்களைவிட அதிக விருதுகளை வாங்கி குவிப்பார் என்று சொன்னார். தொடர்ந்து சற்று நிதானித்த அவர், அத்துடன் காதல் திருமணம்தான் செய்து கொள்வார் என்றும் சொன்னார்.
ஜோசியர் சொன்னது போலவே சூர்யா பெரிய நடிகரானார், அதிக சம்பளம் வாங்கினார், காதல் திருமணமும் செய்து கொண்டார். இதனையடுத்துதான் நாங்கள்அவரை தேடிச் சென்று, வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்தோம்.
சூர்யா - ஜோதிகா காதலை பொருத்தவரை, அவர்கள் காதலித்தார்கள். எங்களுடைய சம்மதத்திற்காக கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் காத்திருந்தார்கள். ஒரு கட்டத்தில், கல்யாணம் செய்தால் ஒருவரை ஒருவர் கல்யாணம் செய்து கொள்கிறோம்.
இல்லையென்றால் கடைசிவரை இப்படியே இருந்து கொள்கிறோம் என்று சொன்னார்கள். ஒரு ஆண் மகன் எப்போது தன்னுடைய கடமைகளை சரியாக செய்து தனியாக நிற்கிறானோ? அப்போது அவனின் உரிமைகளை பறிப்பதற்கு இங்கு யாருக்கும் அனுமதி கிடையாது. அந்த வகையில்தான் அவர்களுடைய கல்யாணத்திற்கு சம்மதித்தோம்” என்று பேசினார்.
டாபிக்ஸ்