தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Sivakumar Expressing His Regret For Hurting His Friend

Actor Sivakumar: 'அப்படி செய்ததற்கு வருந்துகிறேன்'.. வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த நடிகர் சிவகுமார்!

Karthikeyan S HT Tamil
Feb 27, 2024 07:11 PM IST

காரைக்குடியில் சால்வையை தூக்கி எறிந்த விவகாரத்தில் நடிகர் சிவகுமார் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகுமார் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சிவகுமார் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது என்னுடைய தவறுதான். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என வீடியோ வெளியிட்டு நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், 'காரைக்குடியில் நடந்த சால்வை சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்திருப்பீர்கள். இவர் யாரோ எவரோ கிடையாது. என்னுடைய தம்பி. 50 ஆண்டுகால நண்பர். 1971-ல் மன்னார்குடியில் நாடகத்துக்கு தலைமை தாங்க சென்றேன்” என்றார். இடையில் குறுக்கிட்ட கரீம், “அண்ணன் மன்னார்குடி வந்தார். அவரை வரவேற்றவன் நான் தான். நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றது. நிகழ்ச்சி முடித்துவிட்டு ஊருக்கு போக வேண்டும் என்றார். சாப்பிடவேயில்லையே என்றேன். ‘நான் எப்போதும் சாப்பிடும் வெங்காயமும், தயிர் சோறும் கொடுத்தால் போதும்’ என்றார். அவருடைய திருமணத்தில் நான் கலந்துகொண்டு வந்தவர்களை வரவேற்றேன்” என்றார்.

தொடர்ந்து பேசும சிவகுமார், 'கரீமின் திருமணத்தையே நான்தான் நடத்தி வைத்தேன். இவருடைய மகள், பேரன் திருமணத்துக்கும் நான் சென்றுள்ளேன். பொதுவாக நிகழ்ச்சிகளில் யாராவது சால்வை அணிவிக்க வந்தால், அதை திருப்பி அவர்களுக்கே போர்த்தி விடுவேன். அன்றைக்கு பலரும் பேசிய பின் கடைசியாக நான் பேசினேன். நிகழ்ச்சி முடியும் போது மணி 10 ஆகிவிட்டது. மிகவும் சோர்வாக இருந்தேன்.

அப்போது கரீம் அங்கு நின்றிருந்தார். எனக்கு சால்வை போடுவது பிடிக்காது என தெரிந்தும் சால்வையோடு நின்றிருந்தார். தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவர் செய்த தவறு என்றால், பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது நான் செய்த தவறுதான். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்