நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி! இந்த இயக்குனரா! தீயாய் பரவும் தகவல்!
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் மற்றொரு பெரிய ஆளுமையாக நடிகர் சிவகார்த்திகேயன் உருவெடுத்து உள்ளார். அதிலும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களும் அவருக்கான சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படம் ரூ.200 கோடியை கடந்த வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. மேலும் அமரன் படத்தில் இராணுவ வீரர் முகுந்த் வரதாராஜனாகவே தெரிந்தார் எனவும் பலர் பாராட்டி வருகின்றனர். பல அரசியல் தலைவர்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். மற்ற மொழி ரசிகர்களும் அமரன் படத்தை பெரிதும் வரவேற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
வரிசைக் கட்டி நிற்கும் படங்கள்
இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் படத்தை தொடர்ந்து இயாயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் நெல்சன் தீலீப் குமார் ஆகியோர் இயக்கத்திலும் இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அமரன் படத்தின் அமோக வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் முற்றிலும் பிஸியான ஹீரோவாக மாறிவிட்டார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படத்திற்காக உடல் ரீதீயாக பெரும் உழைப்பை கொடுத்து பணியாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.
சுதா கொங்கரா உடன் இணையும் சிவகார்த்திகேயன்
இறுதிசுற்று படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் சுதா கொங்கரா, நடிகர் சூர்யாவை வைத்து சூரரை போற்று படத்தை இயக்கி இருந்தார். இந்த இரு படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் நடிகர் சூர்யாவை வைத்து புறநானூறு எனும் படத்தை இயக்கி வருவதாக தகவல் வெளியிடப்பட்டது. இருப்பினும் சூர்யா அப்படத்தில் இருந்து விலகியதால் படப்பிடிப்பு கைவிடப்பட்டது.