சிவகார்த்திகேயனின் மகிழ்ச்சியை 3 மடங்காக்கிய நபர் யார் தெரியுமா? இந்த ஸ்பெஷல் நாளில் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிவகார்த்திகேயனின் மகிழ்ச்சியை 3 மடங்காக்கிய நபர் யார் தெரியுமா? இந்த ஸ்பெஷல் நாளில் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்..

சிவகார்த்திகேயனின் மகிழ்ச்சியை 3 மடங்காக்கிய நபர் யார் தெரியுமா? இந்த ஸ்பெஷல் நாளில் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்..

Malavica Natarajan HT Tamil
Published Jun 02, 2025 03:46 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது மூன்றாவது குழந்தையான பவனின் முதல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் மகிழ்ச்சியை 3 மடங்காக்கிய நபர் யார் தெரியுமா? இந்த ஸ்பெஷல் நாளில் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்..
சிவகார்த்திகேயனின் மகிழ்ச்சியை 3 மடங்காக்கிய நபர் யார் தெரியுமா? இந்த ஸ்பெஷல் நாளில் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்..

சிவகார்த்திகேயன் குழந்தை

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 3வது குழந்தையான பவனின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்த்தியை கரம் பிடித்த சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா, குகன் தாஸ் என இரு பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி 3வது குழந்தை பிறந்தது.

தன் 3வது குழந்தைக்கு பவன் எனப் பெயரிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், சமீபத்தில் அவருக்கு மொட்டையடித்து சிறப்பாக காது குத்து விழா நடத்தினார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் பவனின் முதல் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மும்மடங்கு மகிழ்ச்சி

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதி, "எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துகள் 🥰🥰" எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பு பவன் குட்டி எனக் குறிப்பிட்டு சிவப்பு நிற எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார்.

புரட்டிப்போட்ட அமரன் படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் படம் திரைக்கு வந்தது. இந்தப் படம் மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இது சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை 300 கோடி வசூல் நாயகன் இடத்திற்கு உயர்த்தியது.

சிவகார்த்திகேயன் அடுத்த படங்கள்

இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி எனப் பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலா, நடிகர்கள் ரவி மோகன், அதர்வா போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அதேசமயத்தில் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் மதராஸி படத்தில் நடித்து வருகிறார்.