தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Uththaman: சிவாஜிக்கு கை கொடுத்த ஹிந்தி ரீமேக் படம்..ரசிகர்கள் கொண்டாடிய உத்தமன் ரிலீஸான நாள் இன்று!

Uththaman: சிவாஜிக்கு கை கொடுத்த ஹிந்தி ரீமேக் படம்..ரசிகர்கள் கொண்டாடிய உத்தமன் ரிலீஸான நாள் இன்று!

Karthikeyan S HT Tamil
Jun 25, 2024 06:46 AM IST

48 Years of Uththaman: சிவாஜியின் பல பட தோல்விகளுக்கு பின் இவர் படங்கள் ஓடுமா? என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தான் இப்படம் வெளியானது. ஹிந்தியில் வெளியான 'ஆ கலே லாக் ஜா' திரைப்படத்தினை தழுவிய படம்தான் 'உத்தமன்' திரைப்படம்.

Uththaman: சிவாஜிக்கு கை கொடுத்த ஹிந்தி ரீமேக் படம்..ரசிகர்கள் கொண்டாடிய உத்தமன் ரிலீஸான நாள் இன்று!
Uththaman: சிவாஜிக்கு கை கொடுத்த ஹிந்தி ரீமேக் படம்..ரசிகர்கள் கொண்டாடிய உத்தமன் ரிலீஸான நாள் இன்று!

ட்ரெண்டிங் செய்திகள்

சிவாஜி - மகாதேவன் கூட்டணி

ராஜேந்திர பிரசாத் இயக்கி இருந்த இப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுடன் மஞ்சுளா, பண்டரி பாய், மேஜர் சுந்தர்ராஜன், கே.பாலாஜி, வி.கே.ராமசாமி, நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கனவே 'எங்கள் தங்கராஜா' திரைப்படம் வெற்றியடைந்தது. அதனாலேயே ராஜேந்திர பிரசாத் தமிழில் எத்தனை படம் தயாரித்தாலும் சிவாஜியை வைத்துதான் என முடிவெடுத்தார். சிவாஜியின் பல பட தோல்விகளுக்கு பின் இவர் படங்கள் ஓடுமா? என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தான் இப்படம் வெளியானது. ஹிந்தியில் வெளியான 'ஆ கலே லாக் ஜா' திரைப்படத்தினை தழுவிய படம்தான் 'உத்தமன்' திரைப்படம்.

மிகப்பெரிய வெற்றி

எஸ்.வெங்கட ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருந்தார். கவிஞர் கண்ணதாசன் வரிகளில் 'பழகு பழகு ஆசை படகு', 'தேவன் வந்தான்டி ஒரு தீபம் கொண்டாடி' போன்ற பாடல்கள் ஹிட்டடித்தன. இப்படம் சிவாஜிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்படம் தமிழகத்திலேயே கிட்டதட்ட 200 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது. மேலும் இப்படம் இலங்கையிலும் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. இலங்கையில் கிட்டதட்ட 200 நாட்கள் ஓடிய சிவாஜி படம் இதுதான்.

மகா கலைஞன்

ஒரு நடிகராக பல பரிமாணங்களில் பெரும் வெற்றிகளை தமிழ் சினிமா வரலாற்றில் கொடுத்திருக்கிறார் சிவாஜி. திரையுலகின் நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெருமையுடன் அழைக்கப்படுவார். தன்னுடைய அற்புதமான நடிப்பாலும், கம்பீரமான குரலும் சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான் என தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுவார். அவரது கண், புருவம், நெற்றி, மூக்கு, கன்னம், உதடு என அனைத்துமே நடிப்பை வெளிப்படுத்தும். இப்படி சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்த மகா கலைஞன் எழுபதுகளில் வெளியான சில படங்களின் கதைகளை சரியான தேர்வு செய்ய முடியாமல் 70 களில் திணறினார். அப்படித்தான் இந்த திரைப்படமும் அமைந்தது. 

ஆனால், தொடர் தோல்வியில் இருந்து மீள சிவாஜிக்கு இப்படம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது. இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 48 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆம், 1976 ஆம் ஆண்டு இதே ஜூன் 25-ஆம் தேதிதான் 'உத்தமன்' ரிலீஸானது. காலங்கள் உருண்டோடி இன்றோடு 48 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. காலங்கள் கடந்திருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட காவியம் 'உத்தமன்'.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.