40 வயதுக்கு மேல் சிவகார்த்திகேயனின் அக்கா செய்த சாதனை! வாழ்த்து தெரிவித்து நெகிழ்ந்த தம்பி!
நடிகர் சிவ கார்த்திகேயனின் அக்கா மருத்துவ படிப்பை முடித்துள்ளதாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்தது. மேலும் கோலிவுட்டின் அடுத்த தளபதி என்ற அளவிற்கு நடிகர் சிவகார்த்திகேயனின் புகழ் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்கா குறித்தான பதிவு ஒன்றை அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் அடுத்த தளபதியா?
இந்த ஆண்டு கடந்த செப்டம்பரில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். அதில் விஜய்யிடமிருந்து துப்பாக்கியை வாங்கிக் கொண்டு நீங்கள் வேறு எதுவும் முக்கியமான வேலைக்கு செல்கிறீர்கள், உங்களது வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வசனம் பேசி இருந்தார். இது அரசியலுக்கு செல்லும் விஜய் தனது இடத்தை சிவ கார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுக்குமாறு அமைந்து இருந்தது. இதனை அடுத்து கோலிவுட்டின் அடுத்த தளபதி சிவகார்த்திகேயனாகத்தான் இருப்பார் என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் தளபதியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது எனவும் கூறி இருந்தார். இருப்பினும் தற்போது வெளியான அமரன் திரைப்படம் விஜய் நடித்து வெளியான துப்பாக்கி படத்தின் சாராம்சத்தை ஒத்து உள்ளது பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மேலும் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கராவின் புறநானூறு படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் இந்நிலையை தொடர்ந்து படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது சம்பளமும் உயர்ந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.
குடும்பத்தினருக்கு முன்னுரிமை
நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த பொழுதும் நடிகராக வளர்ந்த பிறகும் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது குடும்பத்தினருடன் கணிசமான நேரத்தை செலவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எந்த நிகழ்விலும் தனது குடும்பத்தினருடன் இணைந்து பங்கு பெறுவது அவரது வழக்கமாகும். இந்த நிலையில் அவர் தற்போது அவரது அக்கா குறித்த பதிவு ஒன்றை அவரது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 42 வயதாகும் அவரது அக்கா மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும்,அதற்கு உதவியாக இருந்த அவரது அக்காவின் கணவர் அத்தானுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார். மேலும் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் அவரது பதிவில், “ எனது மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் எனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அக்கா நீ குழந்தை பிறந்த பின்னரும் 38 வது வயதில் கூட மருத்துவத்துறையில் எம்டி பட்டம் பெற்றுள்ளாய். மேலும் தற்போது 42வது வயதில் கூட தங்கப்பதுக்கத்துடன் மெரிட்டில் எஃப் ஆர் சி எப் படிப்பினையும் முடித்துள்ளாய். இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். அப்பா உன்னுடன் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். உனக்கு எப்போது உறுதுணையாக இருக்கும் அத்தானுக்கு எனது நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.
டாபிக்ஸ்