Vadivelu Vs Singamuthu: “கடைசி காலத்துல படுத்த படுக்கையில கண்ணீர் வடிப்பார்..அழுது புலம்புவார்! - சிங்கமுத்து சாபம்!
நடிகர் சிங்கமுத்து வடிவேலுக்கு சாபம் விட்டு இருக்கிறார்.
நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பிறரால் பாதிக்கப்பட்டவன் துன்பப்பட்டவன்தான் அவனது வயிற்றெரிச்சல் தீர பேசுவான். வடிவேலுவிடம் மேனேஜராக இருந்தவர்கள் காசு முழுவதும் வருமான வரியாகச் செல்கிறது. அதனால் எங்கேயாவது இடம் வாங்கி போட வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது தாம்பரத்தின் அருகில் ஒரு ஒன்றரை கோடி நிலம் வாங்கப்பட்டது அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலம் வாங்கும் பொழுது சிலர் வடிவேலுவுடன் 12 வருடங்கள் பயணிக்கும் சிங்கமுத்து வடிவேலு சம்பாத்தியத்தில் பாதி சம்பாதித்து இருக்க மாட்டாரா? என்று பேசினார்கள்.
இதற்கிடையே என்னுடைய மகன் மாமதுரையில் ஹீரோவாக அறிமுகமானர். இதை வடிவேலுவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் வடிவேலுவின் மகனும் ஹீரோவாக சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் அவர் அதற்கு ஃபிட்டாக இல்லை.
இந்த நிலையில்தான் நான் படம் எடுப்பதை தெரிந்துகொண்ட வடிவேலுவின் உடன் இருப்பவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் அவரிடம் சென்று தனது மகனை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு சிங்கமுத்துவிடம் காசு இருக்கிறது என்றால் அவர் உங்களிடம் கொள்ளையடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கொளுத்தி போட்டனர். இதை வடிவேலு அப்படியே நம்பினார் பாவம் அவருக்கு படிப்பறிவு கிடையாது. கேள்வி ஞானம் மட்டும் தான். அவரது கண்ணை பணம் மறைத்து விட்டது.
அப்பேர்ப்பட்ட ராவணனே அழிந்து போனார். ஒருவர் கெட வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். அதற்காக எல்லாம் வயதான காலத்தில் வடிவேலு நிச்சயம் படுத்துக் கொண்டு அழுவார். அவர் வருத்தப்படுவார். வாழ்க்கை என்றால் இதுதானா? இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் நான் நல்லவனாகவே இருந்திருப்பேனே என்று கண்ணீர் வடிப்பார்.
வடிவேலுவுடன் நடித்த அனைத்து காமெடி நடிகர்களுக்குமே திறமை உண்டு. எங்கள் மீது ஏறி அவர் பெயர் சம்பாதித்து விட்டார். சுற்றியிருக்கும் கலைஞர்களுக்கு தயாரிப்பாளர் தரப்பில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்று பேசினால், அவர்களுக்கு 2000 ரூபாய் கொடுத்தால் போதும் என்று சொல்வார். காமெடி நடிகர்களை பற்றி அவதூறாக பொய்யான தகவல்களை தயாரிப்பாளர்களிடம் பரப்புவார். அதனால் அந்தக் கலைஞரின் வாய்ப்பு உடைபடும்.” என்றார்.
டாபிக்ஸ்