தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Simbu In Thug Life: ‘நான் லேட் சிம்பு இல்லைடா.. ஸ்பீட் சிம்பு’: தக் லைஃப் படத்தில் டெடிக்கேடிவ் ஆக வேலை செய்யும் சிம்பு

Simbu In Thug Life: ‘நான் லேட் சிம்பு இல்லைடா.. ஸ்பீட் சிம்பு’: தக் லைஃப் படத்தில் டெடிக்கேடிவ் ஆக வேலை செய்யும் சிம்பு

Marimuthu M HT Tamil
Apr 22, 2024 03:21 PM IST

Simbu In Thug Life: தக் லைஃப் படத்தில் ஆர்வமுடன் நடித்து வரும் சிம்புவின் செயல்பாடு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தக் லைஃப் படத்தில் சிம்பு
தக் லைஃப் படத்தில் சிம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப். நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடித்துவருகின்றனர்'. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்குகிறார்.

தக் லைஃப்’ படத்தின்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளது, உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், மும்பையில் கோலோச்சிய தாதா தமிழர் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, 1987ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படம் உலகளவில் கல்ட் ஃபிலிமாக பார்க்கப்படுகிறது.

மேலும், டைம் வார இதழ் மற்றும் சிஎன்என் மற்றும் ஐபிஎன் நிறுவனம், குறிப்பிட்ட உலகின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக, ‘நாயகன்’ படம் உள்ளது. இதனால், கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் மீண்டும் இணைந்து உருவாகவுள்ள ‘தக் லைஃப்’படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு உலகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டில் வீடியோ சொன்னது இதுதான்!

'தக் லைஃப்’ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவில், ஒரு வறண்ட மற்றும் புழுதி நிரம்பிய நிலத்தில் ஒருவர் நிற்கிறார். அவர் தன்னை ஒரு கிராமிய உடையில் மூடியிருக்கிறார். அவர் மீது தாக்குதல் நடத்தத் தயாராக ஐந்து பேர் தூரத்தில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி நிற்கிறார்கள். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன் அவரின் முகத்தைக் கேமரா காட்டுகிறது.

ஐந்து பேர் சேர்ந்து அவரை அடிக்க நெருங்கியதும், அவர் தனது முகத்தை மூடியிருந்த துணியை நீக்கி, ஒரு தற்காப்புக் கலை நிலையில் சண்டையிடத் தயாராகிறார். பின்னர், தன்னை தாக்க நினைப்பவர்களையும் கீழே விழ வைக்கிறார். அதன்பின் அவர் மீண்டும் தனது மேலங்கியை அணிந்து கேமராவைப் பார்த்து புன்னகைக்கிறார். அப்போது ‘’என்பேர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்'' என சொல்கிறார். மேலும் அவர் தன்னை கிரிமினல் எனப் பிறர் சொல்வதாகக் கூறுகிறார். படத்தின் தலைப்பு 'தக் லைஃப்' என்று வெளியிடப்படுகிறது. 

‘’தக் லைஃப்'' படத்தின் முதல் செட்யூல் சென்னையில் முடிந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது செட்யூல் செர்பியாவில் நடைபெற்றது. இதனிடையே இப்படத்தில் நடித்து வந்த துல்கர் சல்மான், கால்ஷீட் பிரச்னைகளால் வெளியேறினார் எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் துல்கர் சல்மானுக்குப் பதிலாக, சிம்புவை நடிக்க வைத்திருக்கிறார், மணிரத்னம். 

இப்படத்தின் சூட்டிங்கிற்காக சிம்பு, ராஜஸ்தானின் ஜெய்சல்மர் நகருக்குச் சென்றிருக்கிறார். கடும் வெயிலிலும் வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் சிம்பு நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. மேலும் படத்துக்காக, சிம்பு நீண்ட முடி வளர்த்து இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பின், சிம்புவின் ஜோடியாக திரிஷா நடிப்பதாகக் கூறப்படுகிறது.  

மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் சிலம்பரசன்(சிம்பு) நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, சமீபத்தில் அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். 2021ஆம் ஆண்டு மாநாடு திரைப்படம், 2022ஆம் ஆண்டு வெந்து தணிந்தது காடு திரைப்படம், 2023ஆம் ஆண்டு பத்து தல திரைப்படம் ஆகிய மூன்று படங்களும் கலெக்‌ஷனில் கல்லா கட்டின. அதில் மாநாடு 100 கோடி ரூபாயைத் தாண்டி, வசூல் செய்தது. வெந்து தணிந்தது காடு திரைப்படம் 85 கோடி ரூபாயும்,  மூன்றாவது படமான பத்து தல, 55 கோடி ரூபாயும் வசூலித்தது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்