இயக்குனர் வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்புவா? வெளியான வெற்றிக் கூட்டணி!
நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் கதையில் நடிக்க இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் வரிசையில் நீண்டகாலமாக இருந்து வரும் நடிகர் சிம்பு தற்போது மீண்டும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையாடா மற்றும் வெந்து தணிந்தது காடு என ஹாட்ரிக் படங்களை கொடுத்துள்ளனர். இதில் விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக இன்று வரை இருந்து வருகிறது. கெளதமின் படம் என்றாலே ஒரு தனி ரக சிம்புவை ரசிகர்களுக்கு கொடுத்து விடுவார்.
ஆக்சன், அதிரடி என இருந்த சிம்புவின் காதல் சப்ஜக்ட் எனும் புதிய பக்கத்தை திறந்து வைத்த பெருமை கெளதமையே சாரும். சிம்புவும் வித்தியாசமான உடல் மொழி, தனித்துவமான வசன நடை என அசத்தி விடுவார். அந்த அளவிற்கு ஒரு தனிப்பிரியம் கெளதமிடம் இருந்து விடுகிறது. இவர்களது கூட்டணியில் இறுதியாக வந்த வெந்து தணிந்தது காடு எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற வில்லை.
மாஸான ரீ - எண்டரி
பல ஆண்டுகளாக எந்த படமும் இல்லாமல் இருந்த சிம்பு கிட்டத்தட்ட முப்பது கிலோ எடையை குறைத்துவிட்டு ரீ- எண்டரி கொடுத்தார், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சிம்பு இயக்குனர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் கமல் ஹாசனுடன் சேர்ந்து நடித்துள்ளர். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைப்பெறுகின்றன. மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடித்த வந்த படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இருப்பினும் திடீரென இப்படத்தில் இருந்து விலகியது. இந்த நிலையில் எஸ்டிஆர் 48 படம் குறித்தான அறிவிப்பும் வெளியானது.
வெற்றிமாறன் கதையில்
இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெற்றி மாறன் கதையை கெளதம் வாசுதேவ் மேனன் வாங்கியுள்ளதாகவும், அதில் தான் சிம்பு நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த தகவலைக் கேட்ட பல இணையவாசிகள் வெற்றி மாறன் கதையில் சிம்பு எவ்வாறு பொருந்தி இருப்பார் என கலாய்த்து வருகின்றனர். இது குறித்தான அறிவிப்பு விரைவில் வரும் என சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்