சிம்பு 49 படத்திற்கு என்ன ஆச்சு? இண்டர்நெட்டில் வைரலாகும் நெகட்டிவ் தகவல்கள்.. சோகத்தில் ரசிகர்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிம்பு 49 படத்திற்கு என்ன ஆச்சு? இண்டர்நெட்டில் வைரலாகும் நெகட்டிவ் தகவல்கள்.. சோகத்தில் ரசிகர்கள்..

சிம்பு 49 படத்திற்கு என்ன ஆச்சு? இண்டர்நெட்டில் வைரலாகும் நெகட்டிவ் தகவல்கள்.. சோகத்தில் ரசிகர்கள்..

Malavica Natarajan HT Tamil
Published Jun 16, 2025 04:30 PM IST

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த எஸ்டிஆர்49 படம் கைவிடப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் அதிகளவு பேச்சுகள் அடிபட்டு வருகிறது. இந்தப் படம் கைவிடப்படுவதற்கு பலவித காரணங்களும் கூறப்பட்டு வருகிறது.

சிம்பு 49 படத்திற்கு என்ன ஆச்சு? இண்டர்நெட்டில் வைரலாகும் நெகட்டிவ் தகவல்கள்.. சோகத்தில் ரசிகர்கள்..
சிம்பு 49 படத்திற்கு என்ன ஆச்சு? இண்டர்நெட்டில் வைரலாகும் நெகட்டிவ் தகவல்கள்.. சோகத்தில் ரசிகர்கள்..

எஸ்டிஆர் 49

சிலம்பரசன், தக் லைஃப் படத்திற்கு இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணைந்து தனது 49 வது படத்தில் நடிக்க உள்ளார். ராம்குமார் இதற்கு முன் பார்க்கிங் எனும் படத்தை இயக்கியிருந்தார். சிம்பு- ராம்குமார் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சில நாட்களுக்கு முன் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

சிம்பு 49 படக்குழு

தற்போது சிலம்பரசனின் 49வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாகவும், அந்தப் படத்தில் நடிகர் சந்தானம் நடிக்க உள்ளதாகவும் கூறி வந்தனர். இதனை சந்தானம் பொது வெளியிலேயே படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தமானார்.

கயாடு லோஹர் லைன் அப்

முன்னதாக, கயாடு லோஹர் டிராகன் படத்தை தொடர்ந்து இதயம் முரளி படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்க உள்ளார். சிம்புவின் 49வது படத்தையும் ஆகாஷ் பாஸ்கரனின் டாந் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், இந்தப் படத்திலும் கயாடு லோஹர் நாயகியாக நடிக்கிறார் என தகவல்கள் பரவி வருகின்றன.

படம் கைவிடப்பட்டதா?

சிம்புவின் இன்னும் பெயரிடப்படாத எஸ்டிஆர்49 படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் கூறப்படும் நிலையில், அதற்கு ஏராளமான காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானதாக கூறப்படுவது, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தான். தற்போது அமலாக்கத்துறையினரின் வலையில் சிக்கியுள்ளதால், படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர் தயாரிப்பில் உருவாகி வரும் பராசக்தி படமும் இதே காரனத்தினால் தான் தாமதமாகி வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

இதனால், அதிருப்தி அடைந்த படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தனது அடுத்த பட வேலையை பார்க்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில், தற்போது கதாநாயகனாக வலம் வரும் சந்தானம் இந்தப் படத்தில் ஹீரோவிற்கு இணையாக வசனம் கேட்டதால் படக்குழுவில் சில சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனாலும் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், படம் தொடர்ந்து நடக்குமா இல்லையா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

எஸ்டிஆர் அடுத்த படங்கள்

சிலம்பரசன் தக் லைஃப் படத்திற்கு பின் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடிக்க இருப்பதுடன் அந்தப் படத்தை அவரே தயாரிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது படத்திலும் நடிக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.