'ஜீன்ஸ்ல சுத்துறவங்க எல்லாம் கெட்ட பொன்னும் இல்ல.. சுடிதார்ல இருக்குறவங்க நல்ல பொன்னும் இல்ல'- சிம்பு தக் லைஃப் பதில்
நடிகர் சிலம்பரன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில், ஜீன்ஸ்ல சுத்துறவங்க கெட்ட பொன்னு இல்ல.. சுடிதார்ல இருக்குறவங்க நல்ல பொன்னும் இல்ல என பேசி மாணவர்களிடம் ஸ்கோர் செய்துள்ளார்.

'ஜீன்ஸ்ல சுத்துறவங்க எல்லாம் கெட்ட பொன்னும் இல்ல.. சுடிதார்ல இருக்குறவங்க நல்ல பொன்னும் இல்ல'- சிம்பு தக் லைஃப் பதில்
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக உள்ள நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் கமல், த்ரிஷா உள்ளிட்டோருடன் சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளநிலையில், சிம்பு அடுத்தடுத்து இன்னும் பெயரிடப்படாத 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இந்நிலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரியில் தனது ரசிகர்களான மாணவர்களை பார்த்த சிம்பு அவர்களுடன் பேசி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.