Thug Life Simbu: தக் லைஃப் படத்தில் இவருக்குப் பதில் இவரா.. அய்யோ என்னாச்சு.. இப்படி ஒரு சிக்கலா?
Thug Life Simbu: கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் நடிகர் சிம்பு இணைந்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப். நடிகர் கமல்ஹாசன், ஜெயம் ரவி, த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்'. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்குகிறார்.
இதன்மூலம், தக் லைஃப் படத்தின்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளது, இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கிறது. ஏனெனில், மும்பையில் கோலோச்சிய தாதா வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, 1987ஆம் ஆண்டு உருவாக்கிய ‘நாயகன்’ திரைப்படம் உலகளவில் கல்ட் ஃபிலிமாக இருந்துவருகிறது.
மேலும், டைம் வார இதழ் மற்றும் சிஎன்என் மற்றும் ஐபிஎன் நிறுவனம், குறிப்பிட்ட உலகின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக, நாயகன் படத்தைக் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் மீண்டும் இணைந்து உருவாகவுள்ள ‘தக் லைஃப்’படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு உலகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைட்டில் அறிவிப்பு வீடியோவில் கவனம் ஈர்த்த தக் லைஃப்:
தக் லைஃப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவில், ஒரு வறண்ட மற்றும் பனி நிலத்தில் ஒருவர் நிற்கிறார். அவர் தன்னை ஒரு கிராமிய உடையில் மூடியிருக்கிறார். அவர் மீது தாக்குதல் நடத்தத் தயாராக ஐந்து பேர் தூரத்தில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி நிற்கிறார்கள். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன் அவரின் முகத்தை கேமரா காட்டுகிறது.
ஐந்து பேர் சேர்ந்து அவரை அடிக்க நெருங்கியதும், அவர் தனது முகத்தை மூடியிருந்த உடையை நீக்கி, ஒரு தற்காப்பு கலை நிலையில் சண்டையிடத் தயாராகிறார். பின்னர், தன்னை தாக்க நினைப்பவர்களை வீழ்த்துகிறார். அவர்கள் அனைவரையும் நீக்கிய பிறகு, அவர் மீண்டும் தனது மேலங்கியை அணிந்து கேமராவைப் பார்த்து புன்னகைக்கிறார். அப்போது என்பேர் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என வறண்ட நிலத்தில் இருந்தவர் சொல்கிறார். மேலும் அவர் தன்னை கிரிமினல் எனப் பிறர் சொல்வதாகக் கூறுகிறார். படத்தின் தலைப்பு 'தக் லைஃப்' என்று தெரியவருகிறது. நான்குமாதங்களுக்கு முன்பு, வெளியான ‘தக் லைஃப்’ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவினை, இதுவரை 26 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
தக் லைஃப் படத்தின் முதல் செட்யூல் சென்னையில் முடிந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது செட்யூல் செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தில் நடித்து வந்த துல்கர் சல்மான், திடீரென கால்ஷீட் பிரச்னைகளால், லக்கி பாஸ்கர் என்னும் தெலுங்கு படத்தில் முழுமையாக நடித்து வருகிறார். இதனால், அந்த இடத்தில் துல்கார் சல்மானுக்குப் பதிலாக, சிம்புவை நடிக்க வைத்திருக்கிறார், மணிரத்னம்.
மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் சிலம்பரசன் என்னும் சிம்பு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு, சமீபத்தில் அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். 2021ஆம் ஆண்டு மாநாடு, 2022ஆம் ஆண்டு வெந்து தணிந்தது காடு, 2023ஆம் ஆண்டு பத்து தல ஆகிய மூன்று படங்களும் கலெக்ஷனில் கல்லா கட்டின. அதில் முதல் படம் 100 கோடி ரூபாயைத் தாண்டி, வசூல் செய்தது. இண்டாவது படம் 85 கோடி ரூபாயும், மூன்றாவது படமான பத்து தல, 55 கோடி ரூபாயும் வசூலித்தது.
டாபிக்ஸ்