தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Simbu Condoles The Death Of Singer Bhavadharani

RIP Bhavadharani : குரல் மூலம் மக்கள் இதயத்தில் என்றும் வாழ்வார்.. பாடகி பவதாரணி மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல்!

Divya Sekar HT Tamil
Jan 26, 2024 06:23 PM IST

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரணி மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாடகி பவதாரணி மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல்
பாடகி பவதாரணி மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னணி பாடகியாக மட்டும் அல்லாமல் 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரணி திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இளையராஜவின் மகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி. இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். 

ஆனால், இவரது குரல் மிகவும் வித்யாசமானதாக இருக்கும். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

ராசய்யா படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடியுள்ளார்.

இவர் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு பட உலகில் நுழைந்தார். இவர் ரேவதி இயக்கிய பிர் மிலேங்கே படத்திற்கும் இசையமைத்தார். இவர் வெள்ளிச்சி என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் வாங்கினார்.இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு விளம்பர நிறுவன நிர்வாகி. இவர் சென்னை ரோசரி மெட்ரிக் பள்ளியில் படித்தவர்.

இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டானது. அதில் குறிப்பிடும்படியானவை, உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய அண்மையில் ஹிட்டான பாடல் ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா என்பதாகும். இவர் வித்யாசமான குரல் வளம் கொண்டவர். இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

தனித்துவமான குரல்வளம் கொண்ட பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்று உள்ளார். 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டார். ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று மாலை 5.20 மணிக்கு மரணம் அடைந்தார் .

இலங்கையில் சிகிச்சை பெற்ற பவதாரணியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பலரும் பவதாரணி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அன்பான மற்றும் அப்பாவித்தனமான குரல் மூலம் மக்கள் இதயத்தில் என்றும் வாழ்வார். நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள். சீக்கிரம் சென்றுவிட்டார்! இளையராஜா சார் மற்றும் எனது சகோதரர் யுவன் குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். இக்கணத்தில்! நிம்மதியாக இருங்கள் பவதாரிணி."பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.