HBD Simbu: தன்னை தானே செதுக்கிய சிலம்பரசன்.. தடைகளை தகர்த்து தெரிந்து ஜொலிக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார்
Simbu Birthday: நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கோலிவுட் சினிமாவிற்கு இளமையின் பரிசு என்றால் அது சிம்பு தான். இவர் பிறந்ததே சினிமாவிற்கு தான். உறவைக் காத்த கிளி படம் மூலம் 1984 ஆம் ஆண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
ஐ அம லிட்டில் சூப்பர் ஸ்டார் என ஒரு சிறிய பையனுக்கு எண்டரி பாடல் வைத்தது என்றால் அது சிம்புவிற்கு மட்டுமே. இன்று வரை அது போன்று யாருக்கும் வைத்ததே இல்லை.
நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காதல் அழிவதில்லை, தம், அலை உள்ளிட்ட படங்களில் நடித்து, விரல்களை மடக்கி வித்தை காட்டினார். அப்போது அவர் கையில் கருப்பு வையர் கட்டியதைப் பல இளைஞர்கள் அப்படியே பின்பற்றினர்.
ஸ்டைலிஷ் சிம்பு
சிலம்பரசன் என்ற இயற்பெயருடன் தமிழில் அறிமுகமான இவர், சிம்பு, எஸ்.டி.ஆர் என்ற புனைப் பெயர்களால் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.
அதோடு நடிப்பு என்ற வட்டத்திற்குள் மட்டுமே நின்றுவிடாமல், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமையைக் கொண்டவராக வலம் வருகிறார். 2004 ஆம் ஆண்டில் வெளியான மன்மதன் மற்றும் சிம்பு இயக்கிய வல்லவன் ஆகிய படங்கள் அதிரி புதிரி ஹிட்டானது.
பாடல் பாடும் சிம்பு
இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறார். அதில் பெரிய அளவில் அவருக்கு வெற்றியைத் தந்த படங்கள் என்றால் மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, தொட்டி ஜெயா, மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு.
ஒரு மனிதருக்குப் பிரச்சனை வரலாம். ஆனால் வாழ்க்கையே பிரச்சனை என்றால் எப்படி. திரும்பிய பக்கம் எல்லாம் சர்ச்சைகள். எந்த பக்கம் திரும்பினாலும் சர்ச்சை தான். அவர் பார்க்காத வெற்றியும் இல்லை அவர் பார்க்காத தோல்வியும் இல்லை.
2017 ஆண்டு மிகவும் சிக்கலானது. சிம்புவிற்கு மட்டுமில்லை அந்த ஆண்டு சினிமாவுக்கே சரியில்லாத ஆண்டு. 2017ல் நடிகர் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் வெளியானது. படம் படு தோல்வியைச் சந்தித்தது.
இதில் நடித்த போது சிம்பு ஒழுங்காக படப்பிடிப்புக்கு வரவில்லை, கதையை தன் விருப்பத்திற்கு மாற்ற சொல்கிறார் என்ற எல்லாம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். படத்தின் ஒட்டுமொத்த தோல்விக்கே சிம்பு தான் காரணம் என்பது போல் படக்குழு மாற்றினார்கள். இதனால் சிம்பு ரசிகர்களே ஒரு நிமிடம் அதிர்த்துப் போய்விட்டனர்.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
ஒரு கட்டத்தில் சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. இதனால் மொத்த தமிழ் சினிமாவும் சிம்பு என்றாலே சர்ச்சை, சிக்கல் தானா? என ஒரு நொடி நின்றுவிட்டது.
இந்த சமயத்தில் தான் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் இடம் பெற்ற ரெட் கார்டு பாடல் மூலம் பதிலடி கொடுத்தார்.
அதில், "பட்டதை பட்டுனு சொன்னா என்ன கெட்டவனு சொல்லுங்க ஓரமா போய் உக்காந்தா என்ன உத்தமனு சொல்லறீங்க தப்புனு தெரிஞ்ச டப்புன்னு கொதிக்கும் பிரச்சனை என்னக்கு பாயசம் என் பேச்சுல இல்ல பொய் வேஷம் என உரசி பாத நீ நாசம்" என்ற வரிகள் சிம்புவிற்காக எழுதப்பட்டது சர்ச்சையானது.
எனக்கா ரெட் கார்டு
அரசியல் சம்பவம், மக்கள் போராட்டம், மெரினாவில் நடந்த போராட்டத்தில் அவர் பேசியது என அனைத்தும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. அத்துடன் இளைஞர்கள், மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி வந்தால் தான் பக்கபலமாக இருப்பேன் என உறுதியளித்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
ஏமாற்றிய செக்க சிவந்த வானம்
நீண்ட காலமாக சிம்பு ஒரு வெற்றியை கூட ருசித்து பார்க்கவில்லை. அப்படி இருக்கும் சமயத்தில் அவர் மணிரத்னம் கூட்டணியில் உருவான, செக்க சிவந்த வானம் படத்தில் கமிட்டானர். எதிராஜ் பாத்திரம் அவருக்கு கைகொடுக்கும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
எஸ் டி ஆர் கம்பேக்
என்ன டா ஆச்சு நம்ம தலைவனுக்கு என ரசிகர்களே சம்பித்து போன நிலையில் தான் அதிரடியாக கம்பேக் கொடுத்தார் சிம்பு. கொரோனா காலக்கட்டத்தில் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து ஈஸ்வரன் படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
அதற்காக தான் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டேன் என்பது குறித்து வீடியோ பதிவையும் வெளியிட்டு இருந்தார். அப்போது தான் சிம்பு ரசிகர்களுக்கு உயிரே வந்தது. வா தலைவா.. எவ்வளவு நாள் ஆச்சு இப்படி பார்த்து.. என கமெண்டுகளை தெறிக்கவிட்டனர்.
கம்பேக் என்றால் என்ன சும்மாவா… என்பது போல் வந்தவுடன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவிட்டார். இவர் நடித்த ஈஸ்வரன், மகா, மாநாடு உள்ளிட்ட படங்கள் ஹிட்டானது. ஈஸ்வரன் படம் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் கோவில் படத்தில் பார்த்த சிம்புவை போல் இருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்தடுத்து வெளியான மாநாடு, செக்க சிவந்த வானம், பத்து தல என தொடர்ந்து வெற்றி கனியை ருசித்து பார்த்தார் சிம்பு.
காதல் சிலவற்றில் அவர் சந்தித்த சருக்கல் காரணமாக இப்போது அம்மா பார்த்து வைக்கும் பெண்ணே போதும் என்ற பாதுகாப்பு நிலைக்கு வந்துவிட்டார் சிம்பு.
தன் மீது எத்தனை குறைகள், சர்ச்சைகள் எழுப்பினாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ரசிகர்கள் வைத்த அன்பிற்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். இப்படிப்பட்ட மனிதர் என்றுமே எங்களுக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் தான் என்று அவரை, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ரெட் கார்டு, பட ரிலீஸ் பிரச்சனை என தனக்கு வந்த அத்தனை தடைகளைத் தகர்த்து எரிந்த சிம்புவிற்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!
டாபிக்ஸ்