Siddharth Aditi Marriage: நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கெட்டிமேளம் டும் டும்! தம்பதிகளான சித்தார்த் - அதீதி ராவ்
காதலில் இருந்து வந்த நடிகர் சித்தார்த், நடிகை அதீதி ராவ் ஆகியோர் தற்போது தம்பதிகளாக மாறியுள்ளனர். உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து வருகிறார் சித்தார்த். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார். அதேபோல் பாலிவுட் நடிகையாக இருந்து வந்த அதீதி ராவ், தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து, சித்தார்த், அதீதி ராவ் இடையே அறிமுகம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நட்பாக பழகி வந்தனர்.பின்னர் இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில், ஒன்றாகவும் ஊர் சுற்றி வந்தனர். ரீல்ஸ் விடியோ பகிர்வது முதல் பார்டி, பொது நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் விடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. சித்தார்த், அதீதி காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுதொட்ர்பாக வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.
உறவினர்கள் முன்னிலையில் திருமணம்
காதல் ஜோடிகளாக வலம் வந்த சித்தார்த் - அதீதி ராவ் ஆகியோர் திருமணம் செய்து கொண்டு தற்போது தம்பதிகளாக மாறியுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் வனபார்த்தி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கபுரம் கோயில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
சித்தார்த் - அதீதி காதல்
தெலுங்கில் மகா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த் - அதீதி ராவ் ஆகியோர் இணைந்து நடித்தார்கள். இந்த படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் டேட்டிங்கில் இருந்த வந்தனர். தொடர்ச்சியாக இவர்கள் காதலிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இருவரும் முதலில் மறுப்பு தெரிவித்தனர்.
கடந்த ஆண்டில், அதீதி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சித்தார்த், "ஹேப்பி பர்த்டே பார்னர்" என குறிப்பிட்டு நீண்ட ரெமாண்டிக்கான வாழ்த்து தெரிவித்தார். இதற்கு அதீதியும் நன்றி தெரிவித்தார்.
அத்துடன் சித்தார்த் - அதீதி ஆகியோர் சில காலம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகன.
இரண்டாவது திருமணம்
சித்தார்த், அதீதி ராவ் ஆகிய இருவரும் முறையே இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்திருந்த அதீதி ராவ், அவரை விவாகரத்து செய்தார்.
இதன்பின்னர் இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நிலையில் தற்போது சித்தார்த்தை அவர் கரம் பிடித்துள்ளார்.
அதீதி ராவ் படங்கள்
அதீதி ராவ் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 2022இல் ஹே சினாமிகா என்ற படம் வெளியானது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக அவர் நடித்திருப்பார்கள்.
தற்போது காந்தி டாக்ஸ் என்ற சைலண்ட் படத்திலும், லையனஸ் என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார்.
சித்தார்த் படங்கள்
சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான சித்தா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று விமர்சக ரீதியாக பாராட்டுகளையும் பெற்றது. இதைத்தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்