குவாட்டரும்.. பிரியாணியும் குடுத்தா கூட கூட்டம் வரும்.. புஷ்பாவை கிண்டல் செய்த சித்தார்த்..
புஷ்பா பட விழாக்களில் குவியும் ரசிகர்களை நடிகர் சித்தார்த் கிண்டல் செய்யும் தொனியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகிறது.
நடிகர் சித்தார்த், சித்தா, இந்தியன் 2 படத்திற்கு அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் மிஸ் யூ. செவன் மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ குமரன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சித்தார்த்தின் ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் பால சரவணன், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
மிஸ் யூ புரொமோஷன்
மிஸ் யூ படம் வரும் டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில்,படக்குழு பல்வேறு விதமான புரமோஷன்களில் ஈடுபட்டுள்ளது. பிடிக்காத பெண்ணை காதலிப்பதால் சித்தார்த் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை காதல் கலந்த காமெடி படமாக இயக்கி உள்ளதாக இயக்குநர் கூறி இருந்தார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர் சித்தார்த் மதன் கௌரியின் ஓஎம்ஜி ஷோவில் பங்கேற்று பேசினார். அப்போது, திரைப்படம், சினிமா வாழ்க்கை பற்றிய கருத்துகளை பகிர்ந்துகொண்ட சித்தார்த் புஷ்பா படத்திற்கான புரொமோஷன்களை தாக்குவது போல் பேசி உள்ளார்.
ஜேசிபிக்கு கூட கூட்டம் கூடும்
அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி பாட்னாவில் நடந்த போது அவரைக் காண லட்சக் கணக்கான ரசிகர்கள் குவிந்தனர் என மதன் கௌரி சித்தார்த்திடம் கூறினார். அதற்கு பதிலளித்த சித்தார்த், நம் ஊரில் வீடு கட்ட ஜேசிபிஐ கொண்டு வந்து நிறுத்தினால் கூட தான் மக்கள் கூட்டம் கூடும்.
அரசியல் கட்சி எல்லாம் ஜெயித்திருக்கும்
இது எல்லாம் மார்க்கெட்டிங். அவங்ககிட்ட கூட்டம் கூட வைக்க ஒரு படமும், அந்த படத்திற்கான பாட்டும் இருந்தது. அதனால் மக்கள் கூட்டம் அவ்வளவு இருந்தது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். மக்கள் கூட்டம் கூடுவதற்கும் அவர்கள் ஆதரவு தருவதற்கும் பெரிய வித்யாசம் உள்ளது. கூட்டம் கூடுவதால் ஆதரவு இருக்கிறது என்றால் அரசியல் கட்சிகள் எல்லாம் இப்போது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
குவாட்டரும் பிரியாணியும் கொடுத்தால் கூட்டம்
எங்கள் காலத்தில் எல்லாம் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்தால் கூட கூட்டம் வரும். ஒரு படம் தியேட்டரில் ஓட வேண்டும் என்றால் படம் மக்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும். மக்கள் தான் நமக்கான ஆதரவை தருவார்கள். குறிப்பாக சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற வேண்டும்.
ஆரம்பத்தில் மிஸ் யூ படத்திற்கு புஷ்பா 2 திரைப்படம் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நல்ல படத்தை மக்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது எனக் கூறியுள்ளார்.
பிரச்சனையை கிளப்பிய சித்தார்த்
சித்தார்த் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள நிலையில், அல்லு அர்ஜூனுக்காக கூடிய ரசிகர்களை விமர்சிப்பது போல் பேசியது இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்