உயிரைப் பறிகொடுத்து தவிக்கும் சிவ ராஜ்குமார் குடும்பம்.. உருகி உருகி இரங்கல் கடிதம் எழுதிய ஷிவாண்ணா மனைவி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உயிரைப் பறிகொடுத்து தவிக்கும் சிவ ராஜ்குமார் குடும்பம்.. உருகி உருகி இரங்கல் கடிதம் எழுதிய ஷிவாண்ணா மனைவி..

உயிரைப் பறிகொடுத்து தவிக்கும் சிவ ராஜ்குமார் குடும்பம்.. உருகி உருகி இரங்கல் கடிதம் எழுதிய ஷிவாண்ணா மனைவி..

Malavica Natarajan HT Tamil
Dec 29, 2024 10:42 AM IST

கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இருந்த அவர்களின் செல்லப் பிராணி நீமோ உயிரிழந்ததையொட்டி சிவராஜ்குமாரின் மனைவி மனமுருகி எழுதிய கடிதம் வைரலாகி உள்ளது.

உயிரைப் பறிகொடுத்து தவிக்கும் சிவ ராஜ்குமார் குடும்பம்.. உருகி உருகி இரங்கல் கடிதம் எழுதிய ஷிவாண்ணா மனைவி..
உயிரைப் பறிகொடுத்து தவிக்கும் சிவ ராஜ்குமார் குடும்பம்.. உருகி உருகி இரங்கல் கடிதம் எழுதிய ஷிவாண்ணா மனைவி..

நீமோவிற்காக வருந்திய ஷிவாண்ணாவின் மனைவி

நீமோவின் புகைப்படம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். மனிதனுக்கும் வீட்டு விலங்குகளுக்குமான உறவு இன்று இல்லை. இது எவ்வளவு வெறுமையை ஏற்படுத்தும் என்பதும் எங்களுக்குத் தெரியும்" என்று அவரது பதிவிற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

நாங்கள் நீமோவுடன் சேர்த்து 6 பேர்

கீதா சிவராஜ் குமார் வெளியிட்ட அந்தப் பதிவில், "எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பேர் அல்ல, ஆறு பேர். ஷிவண்ணா, கீதா, நிஷு, நிவி, திலீப் மற்றும் என் குழந்தை நீமோ. நிஷுவின் திருமணத்திற்கு முன்பு வந்த பிறந்தநாளுக்காக திலீப் நீமோவை பரிசாக கொண்டு வந்தார். நிஷு ஒரு டாக்டர் என்பதால் அவரால் நீமோவை சரியாக பார்த்துக் கொள்ள நேரமில்லை என்று கூறி அவளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம். இப்படியாக நீமோ எங்கள் வீட்டில் ஆறாவது நபரானார். அந்த 6வது நபரை உயிர்ப்பித்த திலீப்புக்கு நன்றி.

நீமோ எப்போதும் என் பின்னே இருக்கும்

எல்லோரும் அவரது செல்லப்பிராணியின் பின்னால் ஓடுகிறார்கள், ஆனால் நீமோ எப்போதும் என் பின்னால் தான் இருக்கும். நான் சமையலறையில் இருக்கும்போதோ அல்லது நான் வீட்டில் எங்கு சென்றாலும் அது எப்போதும் என் பின்னால் தான் இருக்கும். என் வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி நீமோ மட்டுமே என் பின்னால் எப்போதும் இருக்கும். நீமோ ஷிவாண்ணாவின் காலடியில் உட்கார்ந்து, என் முகம் தெரியும் வகையில் அமர்ந்துக் கொண்டு என்னை கவனித்துக் கொண்டிருக்கும்.

நாங்கள் இருவரும் ஒன்று தான்

நீமோ என் வாழ்க்கையின் ஒரு பகுதி. நிமோவும் கீதாவும் இருவர் அல்ல, நாங்கள் இருவரும் ஒன்றுதான். அவன் வளர்ந்து பெரியவனானதும், அவனை ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொண்டோம். நீமோவுக்கு தேவையான சமயத்தில் உணவு, சிற்றுண்டி, காய்ச்சல் இருந்தால் உடனடி சிகிச்சை கொடுத்தோம். உரிய நேரத்தில் மருந்தும் கொடுத்து மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டோம். ஆனால், இப்போது இந்த குழந்தை நம் அனைவரையும் விட்டு கடவுளிடம் சென்றது.

நான் அமெரிக்கா வந்த பின் இப்படி ஆகிவிட்டது

நான் அமெரிக்கா வந்த பிறகுதான் என் குழந்தை என்னை விட்டுச் சென்றது. அவரது தன்னலமற்ற அன்பை யாராலும் நிரப்ப முடியாது. நாங்கள் அமெரிக்கா வந்த பிறகுதான் தன் உயிரை விட வேண்டும் என்று அவர் முடிவு செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.

ஷிவாண்ணா வலியை அறிந்த நீமோ

சாப்பிடும் போது நிஷு நாற்காலிக்குப் பின்னாலும் பிறகு நிவியுடனும் எங்களுடனும் தூங்குவான். கடந்த ஒரு மாதமாக இரவில் சிவண்ணாவுடன் படுத்து உறங்குவது வழக்கம். இதை அவர் முதலில் ஏற்கவில்லை. அப்போது தான் அப்பாவுக்கு என்ன நடக்குதுன்னு அவனுக்குத் தெரியும்னு நினைக்கிறேன், அதனால தான் அப்பாட்டயே தூங்கிட்டாரன்னு நிவி கூறினாள். அதைப் பார்க்கும் போது எனக்கும் கூட அப்படித்தான் தோன்றியது. நாங்கள் அங்கேயே தங்கியிருந்தால், என் குழந்தை எங்கள் அனைவரையும் விட்டுவிட்டு, இந்த நேரத்தில் கஷ்டப்பட்டிருக்காது என்று நினைத்தேன்.

நாங்கள் அவரை எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அழைத்து வந்தோம், எங்கள் வீட்டில் அனைவரும் நீமோவை தங்கள் சொந்த குழந்தை போலவே நடத்தியுள்ளனர். அவருடன் விளையாண்டு கொண்டும் பேசிக் கொண்டும் தான் எப்போதும் இருந்திருக்கிறோம்.

நீமோ ஷிவாண்ணாவின் வலியை எடுத்துக் கொண்டது

நீமோ எப்போதும் நமக்குள்ளேயே இருக்கிறான், அவன் எனக்குள்ளேயே இருக்கிறான், அவன் எப்போதும் இருக்கிறான். அவர் போய் நான் பார்த்ததே இல்லை.

நான் நீமோவைப் பார்த்திருந்தாலும் அவன் எங்களை விட்டு சென்றுவிட்டான் என்பதை நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். விலங்குகள் நம்மை விட்டுச் செல்லும்போது, அவை நம் வலியையும் தங்களுடன் எடுத்துச் செல்கின்றன. என் நீமோ சிவண்ணாவின் வலியை என்றென்றும் எடுத்துச் சென்றுவிட்டது என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.