Uma Sethuraman: ‘அவர் கூட வாழ்ந்த அந்த 4 வருஷம்… குழந்தைகள அப்படி வளர்க்கணும்..’ - உமா சேதுராமன் எமோஷனல்!
அதே போல தங்களை விட சிறியவர்கள், பெரியவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு என்ன மாதிரியான வசதி இருக்கிறது என்பதை பார்த்து, அவர்கள் பழககூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டோம்.
பிரபல மருத்துவராக இருந்த சேதுராமன் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்து நடிகராகவும் அறிமுகமானர். தொடர்ந்து ‘வாலிப ராஜா’ ‘ சக்க போடு போடு ராஜா’ மற்றும் 50/50 உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமையாள் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சேதுராமன் சென்ற பின்னர் அவரது இழப்பை நேர்மையாக எதிர்கொண்டு வாழ்ந்து வரும் உமையாள் குழந்தைகள் வளர்ப்பு குறித்து கலாட்டா சேனலுக்கு அண்மையில் பேசினார்.
அவர் பேசும் போது, “சேதுராமனுடன் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளுமே எங்களுக்கு நினைவுகள்தான்.
குழந்தை வளர்ப்பை பொறுத்த வரை, நாங்கள் குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. அது தானாகவே எங்களுக்குள் இருந்தது.
நாங்கள் ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டோம். குழந்தைகள், நாம் மிகவும் வசதியாக, எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்கிறோம் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது காரணம் அவர்கள் நாளையே தோல்விகளை சந்திக்க நேரிடலாம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எப்படியான சூழ்நிலைகள் வந்த போதும், அதனை எதிர்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும்
அதே போல தங்களை விட சிறியவர்கள், பெரியவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு என்ன மாதிரியான வசதி இருக்கிறது என்பதை பார்த்து, அவர்கள் பழககூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டோம்.
பள்ளிக்கூடத்தில் கூட என்னிடம் ஆசிரியர் எப்படி உங்களது குழந்தை எல்லோரையும் வாங்க போங்க என்று பேசுகிறது என்று ஆச்சரியமாக கேட்டார். ஆனால் அது எங்களது வளர்ப்பிலேயே இருக்கிறது.
என்னுடய அம்மா எங்களை வாங்க போங்க என்று தான் அழைப்பார். ஆகையால் நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தோம். குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ… அப்படி நாம் அவர்கள் முன்னால் முதலில் நாம் நடக்க வேண்டும்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்