Kalaipuli G Sekaran: நடிகர், தயாரிப்பாளர்,இயக்குநர்; சிறுபட்ஜெட் படங்களுக்கு குரல் கொடுத்த கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalaipuli G Sekaran: நடிகர், தயாரிப்பாளர்,இயக்குநர்; சிறுபட்ஜெட் படங்களுக்கு குரல் கொடுத்த கலைப்புலி ஜி சேகரன் காலமானார்

Kalaipuli G Sekaran: நடிகர், தயாரிப்பாளர்,இயக்குநர்; சிறுபட்ஜெட் படங்களுக்கு குரல் கொடுத்த கலைப்புலி ஜி சேகரன் காலமானார்

Kalyani Pandiyan S HT Tamil
Updated Apr 13, 2025 06:42 PM IST

Kalaipuli G Sekaran: சினிமா விநியோகஸ்தராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி ஜி சேகரன் ஆரம்ப காலத்தில் எஸ். தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராக மாறினார். அதன் மூலமாக தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

Kalaipuli G Sekaran: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்..சிறுபட்ஜெட் படங்களுக்கு குரல் கொடுத்த கலைப்புலி ஜி சேகரன் காலமானார
Kalaipuli G Sekaran: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்..சிறுபட்ஜெட் படங்களுக்கு குரல் கொடுத்த கலைப்புலி ஜி சேகரன் காலமானார

சினிமா விநியோகஸ்தராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி ஜி சேகரன் ஆரம்ப காலத்தில் எஸ். தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராக மாறினார். அதன் மூலமாக தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

தொடர்ந்து, கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 1985ம் ஆண்டு வெளியான ‘யார்’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது. தொடர்ந்து ஜமீன் கோட்டை, குடும்பச் சங்கிலி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், ஊரைத் தெரிசுக்கிட்டேன், காவல் பூனைகள், உளவாளி கட்டுவிரியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.

விநியோக சங்கத்தலைவராகவும் இருந்த ஜி சேகரன் சிறுபட்ஜெட் படங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஆவார். இவரது இறப்பு திரை உலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது உடல் ராயப்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.