தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Sayaji Shinde Celebrates His 64th Birthday Today

HBD Sayaji Shinde: பல மொழிக் கலைஞன்.. இந்திய சினிமாவையே வலம் வரும் சாயாஜி

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 13, 2024 06:00 AM IST

நடிகர் சாயாஜி ஷிண்டே தனது 64 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

நடிகர் சாயாஜி ஷிண்டே
நடிகர் சாயாஜி ஷிண்டே

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படிப்பட்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர்தான் சாயாஜி ஷிண்டே. இந்தியாவில் இருக்கக்கூடிய பழமொழிகளில் இவர் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் பாரதி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழ் அல்லாத வேற்று மொழியை தாய்மொழியாக கொண்ட இவர் சுப்ரமணிய பாரதியார் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.

அங்கு தொடங்கிய இவரது பயணம் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. நடிகர் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த தூள் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிகப்பெரிய பிரபலமாக மாறினார்.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கக்கூடிய அனைத்து நடிகர்களோடும் இணைந்து இவர் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் தொடங்கி காமெடி நடிகர் என அனைத்து வழிகளிலும் இவர் பயணித்துள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் மராத்தி மொழியில் இளங்கலை பட்ட படிப்பை முடித்துள்ளார்.

முதலில் இவருடைய பயணத்தை வாட்ச்மேனாக தொடங்கியுள்ளார். சினிமாவின் மீது ஈர்ப்பு கொண்ட இவர் நாடகத்துறையில் சேர்ந்து தனது நடிப்பு திறமையை பலப்படுத்தியுள்ளார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் மும்பை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டார். மராத்தியில் எடுக்கப்பட்ட நாடகங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக மராத்தி சினிமாக்களில் தனது காலடியை எடுத்து வைத்தார்.

சுப்பிரமணிய பாரதியாக தமிழ் தெரியாத ஒருவர் திறம்பட நடித்தது மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது இதற்காக தமிழ்நாடு அரசு விருது வழங்கியது. குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் இவருடைய நடிப்பு திறமை தான் அனைத்து மொழிகளிலும் இவரை கொண்டு சென்றது என்று கூறினால் அது மிகையாகாது.

மராத்தி தொடங்கி இவரது பயணம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் இவருடைய கதாபாத்திரம் தனித்து தெரியக்கூடிய அளவிற்கு இருக்கும்.

அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியாக நடிக்க கூடிய திறன் கொண்ட கலைஞர் இவர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திரைத்துறையில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார் சாயாஜி.

கலைக்கு மொழி கிடையாது என்ற தத்துவத்திற்கு இது போன்ற கலைஞர்கள் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சாயாஜி ஷிண்டே இன்று தனது 56வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வளர்ந்து வரக்கூடிய இளம் கலைஞர்களுக்கு சாயாஜி ஷிண்டே போன்ற ஆகச் சிறந்த கலைஞர்கள் தான் மிகப்பெரிய உதாரணம் என்று கூறினால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.